நடிகர் தர்ஷன், மனைவியுடன் மகளிர் ஆணையத்தில் ஆஜர்

Bookmark and Share

நடிகர் தர்ஷன், மனைவியுடன் மகளிர் ஆணையத்தில் ஆஜர்

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், அவருடைய மனைவி விஜயலட்சுமி ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனித்தனியாக பெங்களூருவில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி பெங்களூருவில் விஜயலட்சுமி வசித்து வரும் வீட்டுக்கு சென்று தர்ஷன் கலாட்டா செய்துள்ளார். 

இதுகுறித்து சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்தில் தர்ஷன் மீது விஜயலட்சுமி புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே கர்நாடக மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த புகாரை பதிவு செய்து, இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகர் தர்ஷன் மற்றும் அவருடைய மனைவி விஜயலட்சுமி ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பியது.

அதன்படி நேற்று காலை விஜயலட்சுமி பெங்களூரு காவேரி பவனில் உள்ள மகளிர் ஆணைய அலுவலகத்தில் அதன் தலைவி மஞ்சுளா மானஷா முன்பு ஆஜரானார். அவர் தனக்கும், கணவருக்கும் இடையே உள்ள குடும்ப பிரச்சினை குறித்து விளக்கி கூறினார்.

அதைத்தொடர்ந்து நடிகர் தர்ஷன் நேற்று மகளிர் ஆணையத்தில் ஆஜராகி, குடும்பத் தகராறு குறித்தும், மனைவி தங்கியுள்ள வீட்டுக்கு சென்று கலாட்டா செய்தது குறித்தும் விளக்கம் அளித்தார்.

கணவன், மனைவி அளித்த விவரங்களை மகளிர் ஆணைய தலைவி மஞ்சுளா மானஷா பதிவு செய்துக்கொண்டார். முன்னதாக விஜயலட்சமி, மகளிர் ஆணைய அலுவலகத்திற்கு வந்தபோது சிலர் அவரை செல்போனில் படம் பிடித்தனர்.

இதற்கு விஜயலட்சுமியுடன் வந்திருந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து செல்போனை பறித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Post your comment





Related News
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி
போலிசிடம் வசமாக மாட்டிய பிரபல நடிகர் கைது!
மயக்க மருந்து கொடுத்து காதலியை கற்பழித்த இளம் நடிகர் - அதிர்ச்சி தகவல்
சினிமா நடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன்! கோர சம்பவம் - போட்டோ உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions