தனுஷ் அடையாளங்கள் மறைக்கப்பட்ட விவகாரம்- பேட்டியளித்த கதிரேசன், மீனாட்சி தம்பதி

Bookmark and Share

தனுஷ் அடையாளங்கள் மறைக்கப்பட்ட விவகாரம்- பேட்டியளித்த கதிரேசன், மீனாட்சி தம்பதி

தனுஷ் எங்களுடைய மகன் என்று கதிரேசன், மீனாட்சி தம்பதி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் இறுதியாக கடந்த மாதம் 28ம் தேதி மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் ஆஜரானார். அப்போது அவரது அங்க அடையாளங்களை மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் வைரமுத்துராஜா தலைமையிலான குழுவினர் சரி பார்த்தனர்.

இந்நிலையில் டாக்டர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், சிறிய அளவிலான மச்சம் லேசர் சிகிச்சை மூலம் எந்த தடயமும் இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கதிரேசன், மீனாட்சி தம்பதியர் கூறியதாவது, தனுஷ் எங்கள் மகன் என்று நிரூபிப்பதற்காகத் தான் போராடி வருகிறோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தனுஷின் அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் மறைக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் அறிக்கையில் கூட தெரிவித்துள்ளார்கள். இதில் இருந்தே உண்மை வெளி உலகிற்கு தெரியவந்துவிட்டது.

நாங்கள் பணம் காசுக்கு ஆசைப்பட்டு இந்த வழக்கை தொடரவில்லை. நடிகர் தனுஷ் எங்கள் மகன்தான். 16 வயதில் வீட்டை விட்டு வெளியே சென்ற எங்கள் மகன் கலைச்செல்வன், சினிமாவில் தனுஷ் என்ற பெயரில் நடித்து புகழ் பெற்று இருக்கலாம். ஆனாலும் அவன் எனது தாய், தந்தை இவர்கள் தான் என்று நீதிமன்றத்தில் சொன்னாலே போதும் என தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
வடசென்னை' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்?
தனுஷ் வழக்கில் மதுரை ஐகோர்ட்டு புதிய உத்தரவு
தனுஷ் யாருடைய பிள்ளை- வழக்கில் புதிய திருப்பம்
அனிருத், தனுஷை சேர்த்து வைக்கப் பார்க்கிறாரா ரஜினிகாந்த்?
அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.. நடிகர் கமல் டுவிட்டரில் இரங்கல்
சுயநலத்துக்காக எதையும் செய்யமாட்டேன்: நடிகர் விஷால் உறுதி
ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?
பவர் பாண்டி படத்தின் பெயர் மாற்றம்
நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி
தனுஷ் மாதிரி ஆக ஆசைப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய் ஹீரோயின்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions