பழம்பெரும் பாலிவுட் கதாநாயகன் திலிப் குமார் கவலைக்கிடமாக ஆஸ்பத்திரியில் அனுமதி

Bookmark and Share

பழம்பெரும் பாலிவுட் கதாநாயகன் திலிப் குமார் கவலைக்கிடமாக ஆஸ்பத்திரியில் அனுமதி

தற்போது பாகிஸ்தான் நாட்டின் ஒருபகுதியாக இருக்கும் பெஷாவர் நகரில் 1922-ம் ஆண்டு பிறந்த திலிப் குமார், 1944-ம் ஆண்டு வெளியான ‘ஜுவார் பாட்டா’ திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.

‘அந்தாஸ்’, ‘தேவதாஸ்’, ‘மொகலே ஆஸம்’, ‘ஆஸாத்’ உள்பட சுமார் 60 படங்களில் நாயகனாக நடித்த திலிப் குமார், தனது தனித்துவமான நடிப்புத்திறனால் ரசிகர், ரசிகைகளின் உள்ளங்களில் நீங்காதஇடம் பிடித்தார். 8 பிலிம்பேர் விருதுகளை ஒருசேர பெற்ற ஒரே நடிகர் என்ற சிறப்புக்குரிய இவர், பிலிம்பேர் அளித்த சிறந்த நடிகர் பட்டத்தை பெற்ற முதல்நபருமாவார்.
 
இதுதவிர, 1991-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மபூஷன் விருது, 1994-ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது, 1997-ம் ஆண்டு பாகிஸ்தான் வழங்கிய நிஷான் இ இம்தியாஸ் விருது, 2015-ம் ஆண்டு பதம்விபூஷன் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள திலிப் குமாரின் இயற்பெயர் முஹம்மது யூசுப் கான். 

பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராக ஐந்தாண்டுகள் பதவி வகித்த இவர், தனது இரண்டாவது மனைவி சாய்ரா பானுவுடன் மும்பையில் வசித்து வருகிறார். நேற்றிரவு திடீரென்று சளி, கபம் சார்ந்த காரணங்களால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, மும்பையில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள திலிப் குமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இருப்பினும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மும்பை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions