புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டேன்: நடிகர் இன்னசென்ட் எம்.பி. பேச்சு

Bookmark and Share

புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டேன்: நடிகர் இன்னசென்ட் எம்.பி. பேச்சு

மலையாள பட உலகில் பிரபல சிரிப்பு மற்றும் குணசித்திர நடிகரும், சாலக்குடி தொகுதி எம்.பி.யுமாக இருப்பவர் இன்னசென்ட். கம்யூனிஸ்டு கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளானார். 

நோய் ஆரம்ப நிலையில் இருந்ததால் தேவையான மருத்துவ சிகிச்சை பெற்று நோயில் இருந்து விடுபட்டார். இறுதியில் பரிசோதனை செய்தபோது அவருக்கு புற்றுநோய் இல்லை என்பது தெரியவந்தது. இந்தநிலையில் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தது பற்றி நிருபர்களுக்கு அங்கமாலியில் இன்னசென்ட் எம்.பி. பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- 

புற்றுநோயில் இருந்து நான் குணமடைந்து விட்டேன். எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கொடுத்துள்ள மருத்துவ அறிக்கையின் படி நான் முழுமையாக குணமடைந்து விட்டேன். புற்றுநோய் தாக்கியபோது நான் அதைப்பற்றி கவலைப்படாமல் மன தைரியத்துடன் போராடி நோயை வென்றுவிட்டேன்.

புற்று நோய்க்கான மருந்துகள் ஆஸ்பத்திரியில் அதிக விலையில் விற்கப்படுகின்றன. எனவே மத்திய, மாநில அரசுகள் புற்றுநோய்க்கான மருந்துகளை இலவசமாக வழங்க வேண்டும். 

அரசு ஆஸ்பத்திரிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பாராளுமன்றத்தில் எடுத்துரைப்பேன். சில டாக்டர்கள் எழுதி கொடுக்கும் மருந்துகள் ஆஸ்பத்திரிகளில் கிடைப்பதில்லை. பல ரத்த பரிசோதனை நிலையங்களில் உள்ள டாக்டர்கள் தங்களுக்கு கமிஷன் தரும் மருந்து கம்பெனிகளிடமே மருந்துகளை வாங்குகின்றனர். எனது இந்த சிகிச்சை அனுபவத்தை புத்தகமாக எழுதி உள்ளேன். 

அடுத்த மாதம் அந்த புத்தகம் வெளியாக உள்ளது. மீண்டும் சினிமாவிலும், அரசியலிலும் தீவிரமாக ஈடுபடுவேன். சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். அதுபோல விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். 

இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின் போது அங்கமாலி எம்.எல்.ஏ. ஜோஸ், நகரசபை தலைவர் கிரேஸி ஆகியோர் உடன் இருந்தனர். இதற்கிடையில் புற்றுநோயில் இருந்து குணமடைந்துள்ள நடிகர் இன்னசென்டுக்கு திரைப்பட உலகினரும், அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


Post your comment

Related News
21 குண்டுகள் முழங்க நடிகர் அம்பரீஷ் உடல் தகனம் செய்யப்பட்டது
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி
போலிசிடம் வசமாக மாட்டிய பிரபல நடிகர் கைது!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions