பிருத்விராஜ் படத்தில் நடிக்கும் 5 இயக்குனர்கள்..!

Bookmark and Share

பிருத்விராஜ் படத்தில் நடிக்கும் 5 இயக்குனர்கள்..!

இயக்குனர்கள் நடிகர்களாக மாறும் சீசன் மலையாள சினிமாவிலும் தலையெடுக்க துவங்கியுள்ளது. அப்படித்தானே ஷட்டர் என்கிற அருமையான படத்தை கொடுத்த இயக்குனர் ஜாய் மேத்யூவை, அடுத்து படம் இயக்கவிடாமல் பிசியான குணச்சித்திர நடிகராக மாற்றிவைத்து விட்டார்கள்.. அதேபோல பீக்கில் இருக்கும் இயக்குனர் ரஞ்சித்தையும் சில படங்களில் தலைகாட்ட வைத்தார்கள்..

ஆனாலும் உஷாராக அவர் இப்போது டைரக்சனில் மட்டுமே கவனமாக இருக்கிறார்.. இந்த சூழலில் தற்போது பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துவரும் அனார்கலி படத்தில் மொத்தம் ஐந்து இயக்குனர்கள் நடிக்க இருக்கிறார்கள்.

இதுநாள் வரை கதாசிரியராக வலம் வந்த சாச்சி, இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார்.இந்தப்படத்தில் கடற்படை அதிகாரிகள் மற்றும் சில கதாபாத்திரங்களில் நடிக்க புதுமுகங்களாக ஐந்துபேர் வேண்டும் என தேடிய இயக்குனர் சாச்சி, கடைசியில் ஐந்து இயக்குனர்களை இழுத்துவந்து நடிக்க வைத்திருக்கிறார்.

பிருத்விராஜ் நடித்த இவிடே படத்தை இயக்கிய ஷியாம் பிரசாத், மற்றும் வி.கே.பிரகாஷ், மதுபால் ஆகிய மூவரையும் இதற்கு முன்னரே நடித்து வரும் இயக்குனர்களான ரஞ்சி பணிக்கர் மற்றும் மேஜர் ரவி ஆகிய ஐவரையும் இந்தப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

இவர்களுடன் பிஜுமேனன் மற்றும் கதாநாயகியாக மியா ஆகியோரும் நடிக்கிறார்கள். இதில் பிருத்விராஜும் பிஜுமேனனும் கடற்படை அதிகாரிகளாக நடித்துள்ளார்கள்.


Post your comment





Related News
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions