விஜயகாந்த் மகனுடன் நடிக்கும் நடிகர் விஜய் மற்றும் விஜயகாந்த்..!

Bookmark and Share

விஜயகாந்த் மகனுடன் நடிக்கும் நடிகர் விஜய் மற்றும் விஜயகாந்த்..!

நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஜய் சினிமாவில் நிலைத்து நிற்க கடுமையாக போராடினார். அவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. பொருளாதார ரீதியாகவும் சரிவை சந்தித்தார் சந்திரசேகர்.

இந்நிலையில் பெரிய ஹீரோவுடன் சேர்ந்து நடித்தால் மகனை எளிதாக பிரபலமாக்கலாம் என எண்ணிய எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்தை தொடர்பு கொண்டார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்ட விஜயகாந்த் சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்து கொடுத்தார்.

தனது மகனை கேப்டனுடன் சேர்த்து செந்தூரப்பாண்டி என்ற படத்தை இயக்கினார். அவர் எதிர்பார்த்தபடியே படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

செந்தூரப்பாண்டி படத்திற்கு பின்னர் விஜய் நடித்த படங்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றன. எனவே தனக்கு பிரேக் கொடுத்த விஜயகாந்திற்கு தற்போது நன்றிக்கடனை செலுத்த தயாராகி வருகிறார் விஜய்.

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் அறிமுகமாகும் ‘சகாபதம்’ படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க அந்த படத்தின் இயக்குனர் விஜய்யை அணுகியபோது மகிழ்ச்சியுடன் அதனை ஏற்ற விஜய் அந்த வேடத்தில் நடித்துக்கொடுப்பதாக உறுதியளித்தாராம். இந்த படத்தில் விஜயகாந்தும் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த், விஜய் இருவரும் இந்த படத்தில் கெளரவ வேடத்தில் நடித்தாலும் இருவரும் சேர்ந்து வரும்படியான காட்சியமைப்புகள் எதுவும் இல்லை என இயக்குனர் சந்தோஷ்குமார் ராஜன் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions