11 ஜோடிக்கு 51 சீர்வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த விஜய்!

Bookmark and Share

11 ஜோடிக்கு 51 சீர்வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த விஜய்!

வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ரசிகர் மன்றம் சார்பில் சத்துவாச்சாரி ரங்காபுரம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் 11 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடிகர் விஜய் நேற்று நடத்தி வைத்தார். திருமண நிகழ்ச்சிக்கு தியாகராஜன் அப்சரா பாலாஜி, சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

வேலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன் வரவேற்று பேசினார். மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்ட 11 ஜோடிகளுக்கு நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதா திருமாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தனர்.

திருமணம் முடிந்ததும் 11 ஜோடிகளுக்கு 51 வகையான சீர்வரிசை பொருட்களை விஜய் வழங்கினார். இதனையடுத்து மணமக்கள் குடும்பத்துடன் விஜய் புகைப்படம் எடுத்து கொண்டார். திருமணத்தில் மக்கள் இயக்கம் மாநில பொருப்பாளர் ஆனந்த் செயலாளர் ரவிராஜா, துணைத்தலைவர் ராஜேந்திரன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமண மண்டபம் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். கூட்டம் அதிகமான அளவில் திரண்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். விஜய் வருகையையொட்டி திருமணம் நடைபெறும் ரங்காபுரம் பகுதியில் மக்கள் இயக்க கொடி தோரணங்கள் அதிகளவில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் வேலூர் விழாக் கோலம் பூண்டிருந்தது. நடிகர் விஜய்க்கு மேளதாளத்துடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.


Post your comment





Related News
'விஜய் 60' படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
மே இரண்டாம் வாரம் தொடங்கும் விஜய் சேதுபதியின் ரெக்க படப்பிடிப்பு!
விஜய்-60வது படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்!
விஜய் சேதுபதி இயக்குனருடன் இணைந்த விஷால்!
தெறிக்க விட்ட தெறி படத்தின் ஓவர்சீஸ் வசூல் விவரம்!
லாரன்ஸ் அறக்கட்டளையில் உள்ள குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!
150 கோடியை தொட்ட தெறி வசூல் – உற்சாகத்தில் படக்குழு!
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை!
‘தல 57’ படத்துக்கு அஜித் இன்னும் தயாராகவில்லையா?
தெறி படம் ஓடிய திரையரங்கில் மிளகாய் பொடி வீச்சு – ரசிகர்கள் வெளியேற்றம்!





Latest Gallery

About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2016. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions