கமல் ஹாசன் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்! மீண்டும் போராட்டம்

Bookmark and Share

கமல் ஹாசன் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்! மீண்டும் போராட்டம்

உலகம் முழுக்க பலரையும் திரும்பி பார்க்கவைத்த ஜல்லிக்கட்டு போரட்டத்தை யாரும் மறக்கமுடியாது. இதற்கு கமல் ஹாசன் பலத்த ஆதரவு கொடுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் இதற்காக அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ் ஐயும் நேரில் சந்தித்தார். பிரதமருக்கும் கடிதம் எழுதினார். தற்போது தமழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் அவர் தன் கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கமல் ஹாசன் எங்களின் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கும் முழு ஆதரவு தரவேண்டும் என பலர் சமூக வலைதளங்களில் கருத்தை வெளியிட்டுவருகிறார்கள்.

கமல் தனது டுவிட்டர் பக்க பதிவில், பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும்’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து அது குறித்த தகவல்களையும் பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan ✔ @ikamalhaasan
பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions