நடிகை மானபங்கப்படுத்தப்பட்டதற்கு பின்னால் 2 பேர் உள்ளனர்: இயக்குனர் பரபர புகார்

Bookmark and Share

நடிகை மானபங்கப்படுத்தப்பட்டதற்கு பின்னால் 2 பேர் உள்ளனர்: இயக்குனர் பரபர புகார்

நடிகை ஒருவர் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டதற்கு பின்னால் நடிகர் ஒருவரும், புரொடக்ஷன் மேனேஜரும் இருப்பதாக பிரபல இயக்குனர் பைஜு கொட்டாரக்காரா குற்றம் சாட்டியுள்ளார்.

படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பியபோது கொச்சி செல்லும் வழியில் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பிரபல மலையாள இயக்குனர் பைஜு கொட்டாரக்காரா கூறியிருப்பதாவது , 

நடிகர் 

நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் பிரபல நடிகர் ஒருவர் உள்ளார். அவருக்கும், நடிகைக்கும் இடையே பணப் பிரச்சனை மற்றும் ஒரு பிரச்சனையும் உள்ளது. 

கார் டிரைவர் 

நடிகை ஒரு முறை படப்பிடிப்புக்காக கோவாவுக்கு காரில் சென்றார். காரை பல்சர் சுனி ஓட்டினார். கோவா சென்ற பிறகு சுனிக்கும், அந்த நடிகருக்கும் தொடர்பு இருப்பது குறித்து அறிந்த நடிகை அவரை பணிநீக்கம் செய்தார். 

மேனேஜர் 

நடிகை படப்பிடிப்பில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து எந்த காரும் புரொடக்ஷன் மேனேஜருக்கு தெரியாமல் கிளம்ப முடியாது. 

தொடர்பு 

நடிகையின் சம்பவத்திற்கும் புரொடக்ஷன் மேனேஜருக்கும் சம்பந்தம் இருக்க வேண்டும். கார் டிரைவருக்கு குற்றப் பின்னணி இருப்பது புரொடக்ஷன் மேனேஜருக்கு தெரியாதா என்று பைஜு கேள்வி எழுப்பியுள்ளார்.


Post your comment





Related News
அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்த கஸ்தூரி! இதற்காக தானாம்
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
மனிதாபிமானம் இல்லாத உலகம், குமுறும் திரையுலகம் - அதிர்ச்சி புகைப்படம்.!
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் - கவுதமி பேட்டி
பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய உலக அழகி மனுஷி!
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions