பாவனாவுக்கு பின் நடந்த பாலியல் சதி அம்பலம்! கிரைம் ரிப்போர்ட்

Bookmark and Share

பாவனாவுக்கு பின் நடந்த பாலியல் சதி அம்பலம்! கிரைம் ரிப்போர்ட்

நடிகை பாவனா அஜித், ஜெயம் ரவி, வினய் போன்ற நடிகர்களுடன் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சிறுபிள்ளை போல் இருக்கும் இவருக்கு வயது 30 ஆகிறது.

மலையாள படங்களில் அதிகமாக நடித்து வரும் இவர் நேற்று சிலரால் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

ஹனீபி 2 படத்தில் நடித்து கொண்டிருக்கும் பாவனா திருச்சூரில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு கொச்சிக்கு நள்ளிரவு 1 மணியளவில் இருக்கும்போது தனது காரில் ட்ரைவர் மார்டின் ஓட்ட தனியாக வீடு திரும்பியுள்ளார்.

அப்போது நெடும்பா சேரி பகுதியருகே வேனில் இவரை பின் தொடர்ந்த கும்பல் காரின் மீது மோதியும், காரி ட்ரைவரை தாக்கிவிட்டு பாவனாவை கற்பழிக்க முயற்சித்துள்ளது அக்கும்பல்.

இரண்டு மணி நேரம் காருக்குள் வன்ம கும்பலோடு போரடியிருக்கிறார் பாவனா. பின் அவர்கள் பாவனாவையும் கடத்திச் சென்ற காரையும் பாலாரி வட்டம் என்ற இடத்தில் விட்டுவிட்டு வேறொரு வாகனத்தில் அக்கும்பல் தப்பிச்சென்றுள்ளது.

அருகில் இயக்குனர் லாலின் வீடு இருப்பதையறிந்த பாவனா அங்கு சென்று நடந்ததை சொல்ல, பின் போலிஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு பிறகு பாவனாவின் முன்னால் ட்ரைவராக இருந்த சுனில் மீது சில போலீஸ் புகார் இருந்ததையறிந்த பாவனா அவரை வேலையை விட்டு விலக்கியதால் அவரை பழி வாங்கவே இப்படி செய்ததாகவும் சொல்லப்பட்டது.

மேலும் இப்போதைய ட்ரைவர் மார்டின், சுனிலின் கூட்டாளி என்பதும் தெரியவந்ததால் இருவரும் மீது வழக்கு பதிவு செய்யபட்டு விசாரனை நடந்து வருகிறது.

மேலும் அக்கும்பலில் தப்பியவர்களை தேடும் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions