காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்

Bookmark and Share

காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்

சிம்பு - நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அடா சர்மா. இவர் தற்போது பிரபுதேவாவுடன் `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஹாலிவுட் படமொன்றில் நடிக்க இருக்கிறார். ஹாலிவுட் படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பரிசோதனை காட்சிகளை படம்பிடித்தனர். அதில் காய்கறி விற்கும் பெண்ணாக அடாசர்மா நடித்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. 

மாடர்ன் உடைகளுடன் கவர்ச்சியாக வலம் வந்த அடா சர்மா காய்கறி விற்கும் தோற்றத்தில், ஆளே மாறி இருந்ததாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். அடா சர்மா புதிதாக தமிழ் படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். 


Post your comment





Related News
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதிப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions