என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா

Bookmark and Share

என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா

இமைக்கா நொடிகள் படத்தில் ஒரு அழகான கதாபாத்திரத்தைத் தொடர்ந்து, தனது இரண்டாவது படமான ஜெயம் ரவியின் 'அடங்க மறு' ரிலீஸுக்கு தயாராகி வருகிறார் ராஷி கண்ணா. தனது ஹீரோ ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் ஆகியோரை பற்றி ராஷி கண்ணா பேசும் போது,

"நான் ஒரு நடிகையாக விரும்பிய முதல் மற்றும் முன்னணி விஷயம் 'பார்பி கேர்ள்' என்ற இமேஜை உடைத்து, ஒரு நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். அது இந்த படத்தில் நடந்திருக்கிறது.

உண்மையில், அடங்க மறுவில் என் கதாபாத்திரம் வெறுமனே வந்து செல்வது போல இல்லாமல், படம் முழுக்க பயணிக்கும் ஒரு முழுமையான, வலுவான கதாபாத்திரம். என்னுடைய முழு திறமைகளை வெளிப்படுத்த உதவிய இந்த படம் எனக்கு மிகவும் திருப்திகரமான அனுபவம். 

நாயகன் ஜெயம் ரவி பற்றி பேசும்போது, "மிகவும் எளிமையான, அர்ப்பணிப்பு உள்ள மனிதர், கேமரா முன்பாக அவர் அளிக்கும் உருமாற்றம் வியக்கத்தக்கது. இயக்குனர் சொல்லும் விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு, தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தும் அவர், உண்மையில் ஒரு திறமையான, ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர்" என்றார்.

இயக்குனர் கார்த்திக் தங்கவேலு பற்றி கூறும்போது, "வழக்கமாக ஆக்‌ஷன் திரில்லர் படங்களில் நாயகன் கதாபாத்திரத்தின் மீது மிகுந்த  அழுத்தத்தை கொண்டிருக்கும். ஆனால் பெண்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரத்தை வழங்குவது தனித்துவமானது. அடங்க மறுவில் என் கதாபாத்திரத்தை மிக அழகாக செய்திருக்கிறார் இயக்குனர் தங்கவேலு" என்றார்.

திருமதி சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் இந்த அடங்க மறு படத்தை தயாரித்திருக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இந்த அடங்க மறு, டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சாம் சிஎஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் கேமராவை கையாண்டிருக்கிறார். ரூபன் எடிட்டிங் செய்திருக்கிறார்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions