அடங்கா பசங்க படத்தில் அடக்கமான காட்சிகள்

Bookmark and Share

அடங்கா பசங்க படத்தில் அடக்கமான காட்சிகள்

முற்றிலும் புது முகங்கள் இணைந்து உருவாக்குகிற படம், 'அடங்கா பசங்க'. கவுதம், பாவேந்தன், சுரேஷ் பாபு, சந்தோஷ், சுதீப், வர்ஷா, சிந்து, நிகினா, லட்சுமி, கனகப்பிரிய என நடிப்பவர்களும் புதுசு, கதை, திரைக்கதை, வசனம், எழுதி, தயாரித்து இயக்கும் செல்வநாதனும் புதுசு, ஒளிப்பதிவு செய்யும் அல்கேஷ், இசை அமைக்கும் ஆல்ரின் இப்படி புதுமுகங்களாக இணைந்து உருவாக்கினாலும் படத்தில் துளியும் கிளாமரோ, இரட்டை அர்த்த வசனங்களோ இல்லை என்கிறார் இயக்குனர் செல்வநாதன்.

மேலும் அவர் கூறியதாவது: சினிமாவை உயிராக நேசிக்கும் இளைஞர்கள் இணைந்து உருவாக்குகிற படம் இது. ஒவ்வொரு குடும்பத்திலும் படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். படிக்க வைத்தால் வேலை கிடைத்து விடும் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வைக்கிறார்கள்.

ஆனால் வேலை கிடைப்பதில்லை. அவர்களின் வெற்றிடத்தை காதல் அடைத்துக் கொள்கிறது. அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் தான் படத்தின் கதை. சினிமா கனவுடன் திரிந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறேன்.

திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஜோலார் பேட்டை, நாட்றாம்பள்ளி, போன்ற சினிமாவின் பார்வை அதிகம் படாத இடங்களில் படமாக்கி இருக்கிறேன். புதியவர்களின் இந்தப் படம் புதிதாக இருக்கும் என்கிறார்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
வெளிநாட்டில் வெளியானாலும் தமிழ்நாட்டில் பிரச்சனையில் சிம்புவின் AAA
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்படி இருக்கு? சிம்பு பகிர்ந்த விமர்சனம்
சிம்புவுடன் மோதும் ஜெயம் ரவி
சிம்பு ரசிகர்களே AAA பட டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions