ஆகஸ்டு 9-ந்தேதி கொடைக்கானல் செல்கிறார் அதர்வா!

Bookmark and Share

ஆகஸ்டு 9-ந்தேதி கொடைக்கானல் செல்கிறார் அதர்வா!

அதர்வா நடிப்பில் சண்டிவீரன், ஈட்டி, கணிதன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இதில் பாலா தயாரிப்பில் களவாணி சற்குணம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள சண்டிவீரன் படம் ஆகஸ்டு 7-ந்தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து, செப்டம்பர் 5-ந்தேதி ஈட்டி படம் திரைக்கு வருகிறது.

ஆக, தனது படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரத்தயாராகி விட்டதால் உற்சாகமாகி விட்டார் அதர்வா. இந்த நிலையில், வானவராயன் வல்லவராயன் படத்தை இயக்கிய ராஜமோகன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஆகஸ்டு 9-ந்தேதி முதல் நடிக்கிறார் அதர்வா. சண்டிவீரனைப்போன்று கிராமத்து கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்குகிறது.

அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில், மும்பை வரவு நடிகை பூஜா ஜவாரியாவுடன் அதர்வா நடிக்கும் ரொமான்ஸ் காட்சிகள் படமாகிறதாம். மேலும், இந்த படத்தில் தம்பிராமைய்யா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறாராம். அவருடன் நான் கடவுள் ராஜேந்திரன், எஸ்.பி.பி.சரண் உள்பட பலர் இப்படத்தில் நடிக்கிறார்களாம். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions