அடுத்தடுத்து வரும் அதர்வாவின் 3 படங்கள்!

Bookmark and Share

அடுத்தடுத்து வரும் அதர்வாவின்  3 படங்கள்!

பாலாவின் பரதேசி படத்தில் நடித்த அதர்வாவுக்கு பெயர் கிடைத்த அளவுக்கு பட வரவுகள் கிடைக்கவில்லை. பின்னர் இரும்புக்குதிரை படத்தில் நடித்தார். அந்தப்படமும் ஓடவில்லை. கடந்த வருடம் ஆகஸ்டில் வெளியான இரும்புக்குதிரை படத்திற்குப் பிறகு அதர்வா நடித்த எந்த படமும் இதுவரை வெளியாகவில்லை.  

என்றாலும் தற்போது ஈட்டி, சண்டிவீரன், கணிதன் என 3 படங்கள் அவரது கைவசம் உள்ளன. இந்தப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அதர்வா.  இந்த 3 படங்களுமே தற்போது ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.

ரவி அரசு இயக்கத்தில் உருவாகும் ஈட்டி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட்புரொடக்ஷள் பணிகள்  நடைபெற்று வருகின்றன.  

அதேபோல் டி.என்.சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா, கேத்ரின் தெரஸா நடிக்கும் கணிதன் படத்தின் பணிகளும் இறுதிகட்டத்தில் உள்ளன. இவ்விரு படங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட படம் சண்டிவீரன். பாலாவின் தயாரிப்பில், சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் சண்டிவீரன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இப்படத்தின் பாடல்கள் வரும் 6ஆம் தேதி வெளியாகிறது.

அதைத்தொடர்ந்து சண்டிவீரன் படமும் வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகே கணிதன், ஈட்டி படங்கள் ரிலீஸ் ஆகின்றன. தான் நடித்த 3 படங்கள் அடுத்தடுத்த ரிலீஸாகவிருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் இருக்கிறார் அதர்வா.

 


Post your comment





Related News
8 தோட்டாக்கள் இயக்குனருடன் இணையும் அதர்வா
மீண்டும் அதர்வா ஜோடியான ஸ்ரீதிவ்யா
பாலாவை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர்!
காமன்வெல்த் வீரர்களுடன் மோதிய அதர்வா..!
எங்க பக்கத்துவீட்டு பையன் அதர்வா ஏ எம் ரத்னம் டாக்
கிராமத்து பிரச்சனையை தீர்க்கும் அதர்வா!
தடகள ஓட்டப்பந்தய வீரராக அதர்வா!
பீரியட் பிலிமில் நடிக்கிறார் அதர்வா
அதர்வா நடிக்கும் எங்க ஏரியா உள்ள வராத!
ரூட்டை மாற்றும் அதர்வா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions