கிராமத்து பிரச்சனையை தீர்க்கும் அதர்வா!

Bookmark and Share

கிராமத்து பிரச்சனையை தீர்க்கும் அதர்வா!

சண்டிவீரனைத் தொடர்ந்து அதர்வா நடித்து வரும் படம் ருக்குமணி வண்டி வருது படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானல் பகுதியில் கடந்த 5 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. வானவராயன் வல்லவராயன் படத்தை இயக்கிய ராஜமோகன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் அதர்வாவுடன் தம்பி ராமைய்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் கேரளா பார்டரில் அமைந்த ஒரு தமிழ்நாட்டு கிராமத்தில் நடக்கும் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகிறது. 

சாதாரணமாக வெடிக்கும் பிரச்சினை பின் கேரளா- தமிழ்நாடு என்ற ரீதியில் பெரும் பிரச்சினையாகி விடக்கோடாது என்று பிரச்சினையை தடுத்து நிறுத்தி இரண்டு மாநிலத்து மக்களையும் ஒற்றுமையாக்குவதுதான் அதர்வாவின் வேடமாம்.

இதற்குள் காதல், மோதல், காமெடி, சென்டிமெண்ட் என பல விஷயங்களையும் கலந்திருக்கிறார் இயக்குனர். அதனால் இந்த படம் அதர்வாவை ஒரு அழுத்தமான நடிகராக மாற்றும். அதோடு, இந்த படத்தில் கேரளா பார்டரில் வாழும் மக்கள் எந்த மாதிரி தமிழ் பேசுவார்கள் என்பதையும் உள்வாங்கி நடிக்கும் அதர்வா, அதே போன்று டப்பிங் பேசவும் உள்ளார்.


Post your comment





Related News
8 தோட்டாக்கள் இயக்குனருடன் இணையும் அதர்வா
மீண்டும் அதர்வா ஜோடியான ஸ்ரீதிவ்யா
பாலாவை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர்!
காமன்வெல்த் வீரர்களுடன் மோதிய அதர்வா..!
எங்க பக்கத்துவீட்டு பையன் அதர்வா ஏ எம் ரத்னம் டாக்
தடகள ஓட்டப்பந்தய வீரராக அதர்வா!
பீரியட் பிலிமில் நடிக்கிறார் அதர்வா
அதர்வா நடிக்கும் எங்க ஏரியா உள்ள வராத!
ரூட்டை மாற்றும் அதர்வா!
அதர்வாவுடன் நடித்தது குட் எக்ஸ்பீரியன்ஸ்! -கயல் ஆனந்தி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions