ரூட்டை மாற்றும் அதர்வா!

Bookmark and Share

ரூட்டை மாற்றும் அதர்வா!

தற்போது அதர்வா நடிப்பில் ஈட்டி, கணிதன், சண்டிவீரன் ஆகிய மூன்று படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இதில் சண்டிவீரனுக்கு முன்பே ஈட்டி, கணிதன் படங்களின் படப்பிடிப்பு முடிந்து விட்டன. ஆனால், இரும்புக்குதிரை படத்தின் தோல்வி காரணமாக அந்த படங்கள் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகவில்லை.

அதனால் சண்டிவீரன் வெளியாகும்போது அதர்வாவின் மார்க்கெட் நிமிர்ந்து விடும் அதன்பிறகு தங்கள் படத்தை வெளியிடலாம் என்று சரியான நேரத்திற்காக காத்திருக்கின்றனர்.

மேலும், நகரத்து கதைகளைவிட கிராமத்து கதைகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் காப்பாற்றி விடும் என்பதால், தற்போது களவாணி படத்தை இயக்கிய சற்குணத்தின் இயக்கத்தில் நடித்துள்ள சண்டிவீரன் படத்தை பெரிய அளவில் நம்பிக்கொண்டிருக்கிறார் அதர்வா.

அதோடு, இந்த படத்தின் கதையை டைரக்டர் பாலா கேட்டு, இது கண்டிப்பாக உனக்கு ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று நம்பிக்கை கொடுத்ததால் கதையே கேட்காமல் இப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதாக கூறும் அதர்வா, அடுத்தபடியாக கிராமத்து கதைகளுக்கே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்போகிறாராம்.

சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நடிகர்கள் காமெடி கலந்த கதைகளாக நடிப்பது போல் அதர்வாவும் காமெடி, காதல், செண்டிமென்ட் என்று ரூட்டை மாற்றப்போகிறாராம்.


Post your comment





Related News
8 தோட்டாக்கள் இயக்குனருடன் இணையும் அதர்வா
மீண்டும் அதர்வா ஜோடியான ஸ்ரீதிவ்யா
பாலாவை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர்!
காமன்வெல்த் வீரர்களுடன் மோதிய அதர்வா..!
எங்க பக்கத்துவீட்டு பையன் அதர்வா ஏ எம் ரத்னம் டாக்
கிராமத்து பிரச்சனையை தீர்க்கும் அதர்வா!
தடகள ஓட்டப்பந்தய வீரராக அதர்வா!
பீரியட் பிலிமில் நடிக்கிறார் அதர்வா
அதர்வா நடிக்கும் எங்க ஏரியா உள்ள வராத!
அதர்வாவுடன் நடித்தது குட் எக்ஸ்பீரியன்ஸ்! -கயல் ஆனந்தி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions