ஆக்சன் இப்ப வேண்டாம் என்கிறார் அதர்வா!

Bookmark and Share

ஆக்சன் இப்ப வேண்டாம் என்கிறார் அதர்வா!

பரதேசி படத்திற்கு பிறகு தனது சினிமா கேரியரே மாறப்போகிறது என்று நூற்றுக் கணக்கான கதைகளைக்கேட்டு அதிலிருந்து இரண்டு கதைகளை மட்டுமே ஓகே செய்து நடித்தார் அதர்வா. ஆனால் அப்படி அவர் மலைபோல் நம்பி நடித்த இரும்புக்குதிரை படம் அவருக்கு கைகொடுக்கவில்லை.

அதையடுத்து தடகள வீரராக அவர் நடித்த ஈட்டி படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

அதனால் தற்போது கணிதன், சண்டிவீரன் படங்களை அதிகமான எதிர்பார்ப்பில் நடித்து முடித்துள்ளார் அதர்வா. இந்த இரண்டு படங்களும் தன்னை காப்பாற்றும என்ற நம்பிக்கை அவரிடம் இருக்கிறது.

மேலும், இந்த நேரத்தில் அவரை அதிரடியான ஆக்சன் கதைகளில் நடிக்க வைப்பதற்கு சிலர் முயற்சி எடுத்துள்ளனர். உங்களது ஹைட் வெயிட்டுக்கு ஆக்சன்தான் மேட்சாக இருக்கும் என்றும் அவரை ப்ரைன்வாஸ் செய்கிறார்களாம்.

ஆனால் அதர்வாவோ, இப்போது நான் வளர்ந்து வரும் நடிகன்தான். அதனால் ஆக்சன் ஹீரோவாகவே இப்போது நான் நடிக்க வேண்டும் என்பதில்லை. எனது மார்க்கெட்டை ஓரளவு ஸ்டெடி பண்ணிக்கொண்டுகூட நடிக்கலாம்.

அதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்று அந்த படங்களை இப்போதைக்கு தள்ளி வைத்திருக்கிறாராம் அதர்வா.


Post your comment





Related News
8 தோட்டாக்கள் இயக்குனருடன் இணையும் அதர்வா
மீண்டும் அதர்வா ஜோடியான ஸ்ரீதிவ்யா
பாலாவை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர்!
காமன்வெல்த் வீரர்களுடன் மோதிய அதர்வா..!
எங்க பக்கத்துவீட்டு பையன் அதர்வா ஏ எம் ரத்னம் டாக்
கிராமத்து பிரச்சனையை தீர்க்கும் அதர்வா!
தடகள ஓட்டப்பந்தய வீரராக அதர்வா!
பீரியட் பிலிமில் நடிக்கிறார் அதர்வா
அதர்வா நடிக்கும் எங்க ஏரியா உள்ள வராத!
ரூட்டை மாற்றும் அதர்வா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions