தடகள ஓட்டப்பந்தய வீரராக அதர்வா!

Bookmark and Share

தடகள ஓட்டப்பந்தய வீரராக அதர்வா!

நடிகை அதர்வாவுக்கு பரதேசி ஒரு ஹீரோவாக அவருக்கு அந்த படம் நிலையான இடத்தைக் கொடுக்கவில்லை. அதற்கு பிறகு சற்குணம் இயக்கத்தில் நடித்த சண்டிவீரன் படத்தை பெரிதாக எதிர்பார்த்தார் அதர்வா. அந்தப் படமும் கைகொடுக்கவில்லை.  

இந்த நிலையில் தான் தற்போது இயக்குநர் ராஜமோகன் இயக்கத்தில் ருக்குமணி வண்டி வருது என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படமும் சண்டிவீரன் போன்ற கிராமத்து படம். அதிக நம்பிக்கை வைத்த படங்கள் தன்னை ஏமாற்றி விட்டதால், இந்த படத்தைப்பற்றி  பெரிதாக  எதுவும்  சொல்லாமல்  அமைதியாக நடித்துக் கொண்டிருக்கிறார்  அதர்வா.

மேலும், அவரது நடிப்பில் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கும் ஈட்டி, கணிதன் ஆகிய இரண்டு படங்களில் ஈட்டி விரைவில் வெளிவர தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்படம் பற்றி இயக்குனர் ரவி அரசு கூறுகையில், அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ள இந்த படத்தில் தடகள ஓட்டப்பந்தய வீரராக நடித்துள்ளார் அதர்வா.

படத்தில் காதல், காமெடி என கமர்சியல் அயிட்டங்களும் தேவையான அளவு உள்ளது. அதனால் இந்த படம் அதர்வாவுக்கும், எனக்கும் ஒரு ஹிட் படமாக இருக்கும் என்று கூறும் டைரக்டர் ரவி அரசு, படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய தயாராகிக்கொண்டிருப்பதாக கூறுகிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions