பண்டிகை நாளில் அதர்வாவின் இரும்பு குதிரை ரிலீஸ்?

Bookmark and Share

பண்டிகை நாளில் அதர்வாவின் இரும்பு குதிரை ரிலீஸ்?

பரதேசி படத்திற்குப் பிறகு அதர்வா நடித்து வரும் படம் ‘இரும்பு குதிரை’. இதில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ‘7ஆம் அறிவு’ ஜானி, ராய் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை யுவராஜ் போஸ் இயக்கியிருக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கேமராமேனாக ‘பீட்சா’ கோபி அமர்நாத் பணியாற்றியிருக்கிறார்.

பாண்டிச்சேரியில் நடந்த உண்மைச் சம்பவத்தை படமாக எடுத்துள்ளார்கள். பைக் ரேஸ் சூழலில் நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது.

இது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் அதர்வா பைக் ரேஸ் ஓட்டுபவராக வருகிறார். இரும்பு குதிரை படத்தை சென்சார் குழுவினர் நாளை அல்லது நாளை மறுநாள் பார்க்க உள்ளனர்.

அதையடுத்து இப்படத்தை ஆகஸ்ட் 29-ம் தேதி அதாவது பண்டிகை நாளான விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும் இப்படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் குழு சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளது. குறிப்பாக சண்டைக்காட்சிகள் சிறப்பாக உள்ளது என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். 


Post your comment





Related News
படம் முழுக்க ஒரே கவர்ச்சி, திணறி போன தணிக்கை குழு - எந்த படம் அது?
12 வருடங்களில் 7 படங்கள்: ஜெயிக்கிற குதிரயில் ஜெயிப்பாரா ஜீவன்!
போர்க்குதிரை ரிலீஸானால் சாந்தினியின் \'லெவலே\' வேற..
ராய் லட்சுமிக்காக படம் தயாரிக்கிறது மும்பை நிறுவனம்
ஹீரோயின் ஆனார் இரும்புகுதிரை வில்லி
சாந்தினி நடிக்கும் போர்குதிரை!
சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் இரும்பு குதிரை
சாந்தினியை காப்பாற்றுமா போர்க்குதிரை
இரும்புக்குதிரை இண்டர்நேஷனல் ஸ்டைல் படம்!- சொல்கிறார் அதர்வா
180 கி.மீட்டர் வேகத்தில் பைக் ஓட்டிய அதர்வா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions