கயல் ஆனந்தி குழந்தை மாதிரி : அதர்வா

Bookmark and Share

கயல்  ஆனந்தி குழந்தை மாதிரி : அதர்வா

கயல்  ஆனந்தி, குழந்தை மனநிலையை கொண்டவர் என்று நடிகர் அதர்வா, சண்டிவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார். இயக்குநர் பாலாவின் பி ஸ்டூடியோஸ் தயாரிப்பில், சற்குணம் இயக்கியுள்ள சண்டிவீரன் படத்தில் அதர்வா, கயல்  ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அருணகிரி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலிசோடா படத்திற்கு பிறகு, அருணகிரி இசையமைத்துள்ள இரண்டாவது படம் இது ஆகும். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

கோபுரம் பிலிம்ஸ் அன்பு, இசை சிடியை வெளியிட, படக்குழுவினர் அதை பெற்றுக்கொண்டனர். படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், நடிகர் அதர்வா பேசியதாவது, இயக்குநர் பாலாவின் பரதேசி படம் முடிந்தபிறகு, புதுப்பட வாயப்புகளுக்காக காத்திருந்தபோது, பெரும்பாம், ரத்தக்களரி, அருவா வாழ்க்கைமுறை போன்ற கதைகளாகவே தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.

இதனால், எவ்வித படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன். அப்போது என்னை தொடர்புகொண்ட இயக்குநர் பாலா, அடுத்து நீ நடிக்கும் படம், முழு பொழுதுபோக்கு அம்சம் கொண்டதாக இருக்கவேண்டும். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்கவேண்டும் என்று கூறினார்.

அப்படி ஒரு கதை அமைந்தால், அப்படத்தை தான் தயாரிக்க தயார் என்று பாலா கூறியிருந்தார். அந்தநேரத்தில், இயக்குநர் சற்குணம், சண்டிவீரன் படத்தின் கதையை என்னிடமும், பாலாவிடமும் கூறினார். இக்கதையை கேட்டவுடன், பாலாவிற்கு முகமெங்கும் மகிழ்ச்சி உருவானது. உடனடியாக, இப்படத்தை நாம் பண்ணுகிறோம் என்று கூறிய பாலா, படப்பணிகளை துவக்குமாறு, சற்குணத்திடம் கூறிவிட்டார்.

இந்த படத்தில், எனக்கு ஜோடியாக, கயல்  ஆனந்தி நடித்துள்ளார். கயல்  ஆனந்தி உண்மையில் குழந்தை மாதிரி. அவருக்கு கேமராவுக்கு முன்பு மற்றும் கேமராவிற்கு பின்பு என்று வெவ்வேறு விதமாக அவரால் இருக்கமுடியாது என்று அப்போதுதான் தெரிந்துகொண்டேன். சண்டிவீரன் படத்தின் படப்பிடிப்பு, தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது.

படப்பிடிப்பின்போது, ஒருநாள், கயல்  ஆனந்தி, சற்குணத்திடம் சென்று, "சார், படத்தில் எனக்குன்னு பாட்டு எதுவும் கிடையாதா? " என்று கேட்டார். அதற்கு சற்குணம், உனது பாட்டு, சுவிஸ் நாட்டில் விரைவில் படமாக்கப்பட உள்ளதாக நகைச்சுவையாக கூறியிருக்கிறார். அதை உண்மையென நம்பிய கயல்  ஆனந்தி, அதை தன் அம்மாவிடம் கூறியதோடு மட்டுமல்லாது, படப்பிடிப்புதளம் முழுமைக்கும் அதை கூறியவாறே சுற்றி்த்திரிந்தார்.

படம் பெயரே சண்டிவீரன், இதில் எவ்வாறு பாடல் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்தமுடியும் என்பது கூட தெரியாமல், குழந்தை போன்று கயல்  ஆனந்தி இருந்தார். ஆனால், படத்தில் அவரது நடிப்பு சிறப்பானதாகவே இருந்ததாக அதர்வா கூறினார். இந்த படத்தை, தனது அப்பா முரளிக்கும், மறைந்த எடிட்டர் கிஷோருக்கும், இத்தருணத்தில் அர்ப்பணிப்பதாக, அதர்வா மேலும் கூறினார். 


Post your comment





Related News
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
நான் சின்ன பொண்ணுங்க..... 'மதுரைவீரன்'மீனாட்சி
மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.!
ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை "மதுரவீரன்" பேசும் – சண்முகபாண்டியன்
பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? - உங்க சாய்ஸ் எது?
“மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் – இயக்குநர் P.G. முத்தையா
`மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions