தயாரிப்பாளர் சங்கத்தால் நஷ்டமடந்த அதிபர்?

Bookmark and Share

தயாரிப்பாளர் சங்கத்தால் நஷ்டமடந்த அதிபர்?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடந்த மாதம் 24-ம் தேதி முதல், சில தொலைக்காட்சிகளை மட்டுமே திரைப்பட விழாக்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் அழைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தது.

அந்த குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகளைத் தவிர மற்ற எந்த தொலைக்காட்சிக்கும் விளம்பரங்களைக் கொடுக்கக் கூடாது என்றும் சொன்னார்கள்.

அதைத் தொடர்ந்து மற்ற எந்தத் தொலைக்காட்சிகளும் கடந்த சில நாட்களாக எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கப்படவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவால் எங்களது அதிபர் படம் வியாபார ரீதியாக நஷ்டப்பட்டதோடு, எங்களுக்கு மிகப் பெரும் மன உளைச்சலைக் கொடுத்துள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனர் சூரியபிரகாஷும் குற்றம் சாட்டியுள்ளார்கள். 

இந்தப் படத்தைத் தயாரித்த பென் கன்சோர்டியம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கடிதமும் அவருடைய மன உளைச்சலை ஆடியோவாகப் பதிவு செய்து எழுதினார் அதில் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும், இயக்குனர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். 

அதில், “ சங்க விதிமுறைகளையும், சட்ட திட்டங்களையும் சந்தித்த எனக்கு மன உளைச்சலும் வியாபார பாதிப்பும் மட்டுமே ஏற்பட்டுள்ளது.இந்த இழப்பிற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறார்கள்,” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions