சிம்புவின் அஸ்வின் தாத்தா டீஸர் எப்படி- இதோ விமர்சனம்

Bookmark and Share

சிம்புவின் அஸ்வின் தாத்தா டீஸர் எப்படி- இதோ விமர்சனம்

ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லைனா நயன்தாரா என்ற வெற்றி படத்தை தொடர்ந்து சிம்பு வைத்து அட்டகாசமாக அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படம் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் பெயர் முதல், பஸ்ட் லுக், சிம்புவின் கெட்டப் என ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அஸ்வின் தாத்தா வேடத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது. இந்த டீஸர் எப்படி, வாங்க பாப்போம்.

தாத்தா அப்படின்றது பெயர் தான் ஆனா அங்க தாத்தாவே இல்ல. இத தமன்னா, தாத்தான்னா இதுவரைக்கும் நடக்க முடியாமல் கண்ணு தெரியாமல் காது கேட்காதவர்களைத்தான் பார்த்திருக்கேன் என்று சொல்லியிருப்பாங்க. அந்தளவுக்கு தாத்தா ஆக்ஷன், ரொமான்ஸ் அப்படினு கலக்குகிறார்.

தாத்தாவை விரட்டி விரட்டி காதலிக்கும் தமன்னாவை பார்த்து தமிழ் சினிமாவில் முதன்முறையாக இப்படி ஒரு லவ் ஸ்டோரியா? அப்படினு ரசிகர்கள கேள்வி எழுப்ப வெச்சிருக்கு.

படத்துல கூட பொண்ணுங்களை தொடாம நடிக்கிற டி.ஆருன்னு நினைச்சியாடா, அதே படத்துல தொட்டு உதட்டை கடிச்சு இழுக்கிற எஸ்.டிஆர்டா என்ற வசனம் ரசிகர்கள் கிட்ட எவ்வளவு பெரிய வரவேற்பு பெறும் என்பது படம் வந்தால் தெரியும்.

அதிலும் யுவனின் மாஸ் மியூசிக் டீஸருக்கு ப்ளஸ். மொத்தத்தில் சிம்பு ரசிகர்களுக்கு டிரீட் என்றே சொல்லலாம்.


Post your comment





Related News
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
கமலுக்கு பேரனாகும் சிம்பு
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions