இரண்டு மொழிகளில் முதன்முறையாக நடிக்கும்: அதிதி செங்கப்பா

Bookmark and Share

இரண்டு மொழிகளில் முதன்முறையாக நடிக்கும்: அதிதி செங்கப்பா

Capital Film Works SP சரண் தயாரிப்பில் மதுமிதா இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘மூணே மூணு வார்த்தை’. டெல்லியை சேர்ந்த அதிதி செங்கப்பா தனது நடிப்பு ஆளுமையால் இந்தப் படத்தில் அனைவரையும் கவர்ந்து உள்ளார்.

“ இப்படத்தில் நடித்தது எனக்கு ஒரு புது வித அனுபவம்.தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே சமயத்தில் நான் முதன்முறையாக நடிக்கிறேன். எனது கதாப்பாத்திரத்தின் பெயர் அஞ்சலி, ஒரு தைரியமான , தெளிவான பெண். இவரை ஹீரோ அர்ஜுன் எப்படி குழப்புகிறான் என்று வெகு அழகாக கூறியிருக்கிறார் இயக்குனர் மதுமிதா” என்றார் அதிதி.

“இரு மொழி படம் என்பதால் நடிப்பதற்கு பெரும் சவாலாய் அமைந்தது. இப்படம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. பெரும்பாலான இடங்களில் தமிழ் வசனத்திற்கு பதிலாக தெலுங்கு வசனங்கள் பேசி சொதப்பினேன்.

இதுவாவது பரவாயில்லை, தமிழில் ஒரு கதாநாயகன் தெலுங்கில் இன்னொருவர் . ஒரு சில நிமிடங்களில் இருவருடன் ஒரே முக பாவத்துடன் காதல் செய்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது. என் தோழிகள் கூட இதை வைத்து என்னை ரொம்ப ஓட்டுவாங்க. காதல் காட்சிகளில் ஒருவருடனும் சண்டை போடும் காட்சிகளில் இன்னொருவரிடமும் ஈடுபாடுடன் நடித்தேன். நடிப்பு தான், தப்பா நினைச்சுகாதீங்க என்று   கூறிய அதிதி வெங்கியை பற்றிப் பேசும் போது குலுங்க குலுங்க சிரிக்கிறார். வெங்கி அபாரமான திறைமையானவர். உலக தரத்தில் உள்ள நகைசுவை நடிகர் என சிரிப்புடன் கூறினார்.

உங்களுக்கு தமிழில் தெரிந்த மூணே மூணு வார்த்தை என்று கேட்ட பொழுது ” எனக்கு தமிழ் பேச வராது இருப்பினும். “எனக்கு ரொம்ப பசிக்குது” என்ற மூணு வார்த்தை எனக்கு மிகவும் அதிகம் பயன்படுத்துவதுண்டு.

மிக நேர்த்தியான படங்களை தயாரித்து வரும் Capital Film Works நிறுவனத்திற்கு பணிபுரிந்தது மிகவும் பெருமையாகவுள்ளது. இயக்குனர் மதுமிதா, மற்றும் தயாரிப்பாளர் SP சரண் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.” என்று கூறினார் அதிதி செங்கப்பா.   


Post your comment

Related News
நானும் பாதிக்கப்பட்டேன் - மீ டூ பற்றி மனம்திறந்த அதிதி ராவ்
சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
பிகினியில் பிரபல நடிகை உச்சகட்ட கவர்ச்சி, வறுத்தெடுக்கும் ரசிகர்கள் - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சியான உடையில் பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - தீயாக பரவும் புகைப்படம்.!
அருவி ஹீரோயினை பிரமிக்கவைத்த பிரபல இயக்குனர்!
2017-ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது தளபதி நாயகியா? - பிரம்மிக்க வைக்கும் கருத்து கணிப்பு முடிவு.!
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions