பிரபல பாப் பாடகர் சிலோன் மனோகர் சென்னையில் காலமானார்

Bookmark and Share

பிரபல பாப் பாடகர் சிலோன் மனோகர் சென்னையில் காலமானார்

இலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் (73 வயது) சென்னையில் நேற்று (22.01.2018)  காலமானார். 

ஏ.இ.மனோகரன் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர். பாப் இசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

இவர் பாடிய சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா... என்ற பைலா பாடல் இலங்கை, இந்திய ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. இவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களிலே நடித்தும் பாடியும் வந்தார்.

தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள மனோகர் தமிழ் டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார். நடிகர் கமலஹாசனுடன் ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்தில் பாடி நடித்திருக்கிறார்.


Post your comment





Related News
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
இலியானாவுக்கு திருமணம் முடிந்து விட்டதா? - வைரலாகும் புகைப்படம்.!
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
நடுராத்திரியில் பெண்கள் இருக்கும் அறையில் நுழைந்த சூரி
சூரியை பார்த்து ஒருவர் கூட்டத்தில் என்ன கேட்டார் தெரியுமா?
என்னுடைய நிச்சயதார்தத்தின் பின்னணி என்ன தெரியுமா ? பாவனா ஓபன் டாக்
பாகிஸ்தானில் நடிகர் ஷாருக்கான் படத்துக்கு தடை
சென்னையில் பைரவாவை முந்திய ஷாருக்கானின் ராயிஸ்- முழு வசூல் விவரம்
போட்டிக்கு படம் வந்தும் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடும் ராயிஸ்
ஷாருக்கானின் Raees, ரித்திக் ரோஷனின் Kaabil முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions