வெளிநாடுகளில் ஐ உள்ளிட்ட தமிழ்ப் படங்களின் வசூல் நிலவரம்

Bookmark and Share

வெளிநாடுகளில் ஐ உள்ளிட்ட தமிழ்ப் படங்களின் வசூல் நிலவரம்

சென்ற வார இறுதியில் வெளியான இசை, யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் முதல் மூன்று தினங்களில் ஆறு திரையிடல்களில் 2.06 லட்சங்களை வசூலித்துள்ளது.  

ஐ சென்ற வார இறுதியில் நான்கு திரையிடல்களில் 2,186 யுஎஸ் டாலர்களை தனதாக்கியுள்ளது. சென்ற ஞாயிறுவரை ஐ -இன் யுஎஸ் வசூல் சுமாராக 4.92 கோடிகள். 

கனடாவில் ஐ சென்ற வார இறுதியில் ஆறு திரையிடல்களில் 42,011 டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரை அதன் கனடா வசூல் 393,906 டாலர்கள். நமது ரூபாயில் 2.43 கோடிகள். 

யுகேயில் ஐ சென்ற வார இறுதியில் ஏழு திரையிடல்களில் 11,334 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரை அதன் யுகே வசூல் ரூபாயில் சுமார் 3.61 கோடிகள். 

ஆஸ்திரேலியாவில் ஐ சென்ற வார இறுதியில் மூன்று திரையிடல்களில் 2,528 ஆஸ்ட்ரேலிய டாலர்களை வசப்படுத்தியது. இதுவரை அதன் ஆஸ்ட்ரேலிய வசூல் ரூபாயில் 1.67 கோடி. 

மலேசியாவில் ஐ இதுவரை 5.79 கோடிகளை வசூலித்து முதலிடத்தில் உள்ளது. ஆம்பள சென்ற வார இறுதிவரை 49.16 லட்சங்களை தனதாக்கியுள்ளது.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions