50வது நாளில் பொங்கல் படங்கள்

Bookmark and Share

50வது நாளில் பொங்கல் படங்கள்

பொங்கலுக்கு வெளியான 'ஐ, ஆம்பள, டார்லிங்' ஆகிய படங்கள் வெற்றிகரமாக 50வது நாளைக் கடந்திருக்கின்றன. ஒரே நாளில் வெளியான சில படங்கள் 50வது நாளை வெற்றிகரமாக கடப்பது தமிழ்த் திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடந்துள்ளது. தற்போதெல்லாம் வெளியாகும் படங்கள் ஒரு வாரத்தைத் தாண்டுவதே அதிசயமாக உள்ளது.

சில படங்கள்தான் 25வது நாளைக் கடந்து சாதனை புரிகின்றன. 100வது நாள் என்பதெல்லாம் காணக் கிடைக்காத அதிசயம் என்றாகிவிட்டது. இந்த நிலையில் பொங்கலுக்கு வெளியான மூன்று படங்களும் 50வது நாளைக் கடந்திருப்பது மாபெரும் அதிசயம்தான் என திரையுலகினரே சொல்கின்றனர்.

ஜனவரி 14ல் வெளியான ஐ படம் நேற்றுடன் 50வது நாளைக் கடந்தது. இத் திரைப்படம் சென்னையில் 10க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், மற்ற ஏரியாக்களில் சில திரையரங்குகளிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆம்பள திரைப்படம் சென்னையில் 10 திரையரங்குகளிலும், டார்லிங் சென்னையில் 5 திரையரங்குகளிலும் மற்ற ஏரியாக்களில் சில திரையரங்குகளிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த மூன்று படங்களில் ஐ, டார்லிங் ஆகிய இரண்டு படங்கள்தான் வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் லாபகரமாக அமைந்ததாகச் சொல்கிறார்கள்.

ஆம்பள படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றுள்ளது. அனைத்து வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை,  மற்ற உரிமைகள் என அனைத்து விதமான உரிமைகளையும் சேர்த்து கணக்கிட்டால் மூன்று படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாகவே அமைந்திருக்கும் என்கிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions