எமிஜாக்சனின் கண்களுக்கு ஹாலிவுட் நடிகராக தெரிந்த தனுஷ்!

Bookmark and Share

எமிஜாக்சனின் கண்களுக்கு ஹாலிவுட் நடிகராக தெரிந்த தனுஷ்!

மதராசப்பட்டினம் படத்தில் ஆர்யாவுடன் நடித்த லண்டன் நடிகை எமி ஜாக்சன், அதையடுத்து விக்ரமுடன் தாண்டவம், ஐ படங்களில் நடித்தார். முதல் இரண்டு படங்களிலும் அடக்கி வாசித்த எமி, ஐ படத்தில் மாடலிங் பெண்ணாக நடித்ததால் ஒரு காட்சியில் டூ-பீஸ் உடையணிந்து நடித்து கோலிவுட் நடிகைகளை அதிர்ச்சியடைய வைத்தார்.

தற்போது மான்கராத்தே திருக்குமரன் இயக்கும் படத்தில் உதயநிதியுடன் நடித்துக்கொண்டிருக்கும் எமி, வெகுவிரைவில் வேலையில்லா பட்டதாரி இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்த படத்தில் எமிக்கு, தனுசை துரத்தி துரத்தி காதலிக்கும் வேடமாம். அதோடு, பியூர் வெஜிடேரியன் கேரக்டரிலும் நடிக்கிறாராம். அதனால் அந்த படம் எமிஜாக்சனை புதிய கோணத்தில் வெளிப்படுத்தும் என்கிறார்கள்.

முன்னதாக, தனுஷின் சில ஆக்சன் படங்களை பார்த்து ரசித்த எமிஜாக்சன், அவருக்குள் ஒரு மினி ஹாலிவுட் ஹீரோ இருக்கிறார். அதனால் அவர் கோலிவுட் நடிகர் என்றாலும், என் கண்களுக்கு ஹாலிவுட் நடிகராகவே தெரிகிறார் என்றாராம் எமிஜாக்சன். 


Post your comment





Related News
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!
அப்ப நார்த் மெட்ராஸ் படம் ட்ராப்பா?
வட சென்னை படத்தில் விஜய் சேதுபதி!
50 கோடி பட்ஜெட்டில் தனுஷின் வட சென்னை!
மீண்டும் தள்ளிபோன தனுஷின் வடசென்னை!
தேசிய விருது படத்தை பாராட்டிய தேசிய விருது இயக்குனர்
\'காக்கா முட்டை\'க்கு மேலும் ஒரு விருது!
தனுஷ் நடிக்கும் வட சென்னை 2016ல் தான் ரிலீஸ்
காக்காமுட்டை படத்திற்கு சர்வதேச விருது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions