'கத்தி' யைக் காலி செய்த 'ஐ' வசூல்!

Bookmark and Share

'கத்தி' யைக் காலி செய்த 'ஐ' வசூல்!

நாம் ஏற்கெனவே சொல்லியருந்தபடி 'ஐ' படத்தின் வசூல் 200 கோடியைத் தாண்டிவிடும் என்றே தெரிகிறது. ஜனவரி 14ம் தேதி வெளிவந்த 'ஐ' திரைப்படம் நேற்றுடன் இரண்டு வாரங்களை நிறைவு செய்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக பெரும்பாலான திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. பகல் நேரக் காட்சிகளில்  ஓரளவிற்குக் கூட்டம் குறைந்தாலும் மாலை நேரக் காட்சிகளிலும், வார இறுதி விடுமுறை நாட்களிலும் நல்ல கூட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதாகத் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு வாரங்களில் 'ஐ' திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 65 கோடி ரூபாய் வரை வசூலைக் குவித்திருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சுமார் 40 கோடி ரூபாயும், கேரளாவில் 15, கர்நாடகாவில் 12, மற்ற மாநிலங்களில் 5 கோடி ரூபாயும், பிற நாடுகளில் 40 கோடி ரூபாயும், ஹிந்தி மொழி வெளியீட்டில் சுமார் 20 கோடி ரூபாயும் என மொத்தமாக 197 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வருடங்களில் 'எந்திரன்' படத்திற்குப் பிறகு அதிக வசூலைக் குவிக்கும் ஒரே படம் என்ற பெருமையை 'ஐ' படம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டில் அதிக வசூல் என்று சொல்லப்பட்ட 'கத்தி' படத்தின் வசூலையும் மிஞ்சி புதிய சாதனையை இந்தப் படம் படைத்து வருகிறது.

இவ்வளவுத் தொகை வசூலைப் படம் அள்ளியிருந்தாலும் லாபம் என்ற கணக்கில் படத்தை வாங்கியவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் அளவுக்கதிகமான லாபம் இல்லை என்றாலும் நல்ல லாபத்தைத் தற்போது தர ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

அதிக பட்ஜெட்டில் படம் எடுக்கும் போது லாபத்தில் பங்கு ஓரளவுக்குக் குறைந்துதான் இருக்கும். குறைந்த பட்ஜெட்டில் எடுத்து நல்ல வசூலாகும் போதுதான் லாபத்தில் பங்கும் அதிகமாக இருக்கும். 'ஐ' படத்தைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய பட்ஜெட் என்பதே லாபத்தில் பங்கு என்பது திட்டமாகவே இருக்கும்.


Post your comment





Related News
பொறுமையை சோதிக்கும் நீளமான படங்கள்!
“கத்தி, லிங்கா” சாதனையை முறிடியத்த \'ஐ\'
கத்தி, லிங்கா சாதனையை முறியடிக்கத் தவறிய ஐ... கேரளாவில் மட்டும் சாதனை..
50 நாளை ஓடிக்கடந்த நாய்கள் ஜாக்கிரதை
ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லும் கத்தி வசூல் விவரம்
பின் வாங்கிய புலிபார்வை.. பின்னணியில் நடந்தது என்ன?
\'ஐ\'-யை முந்தியது \'கத்தி\': அனிருத்தின் 6-வது படமும் ஐ-டியூன்ஸில் டாப்!
தீபாவளிக்கு \'ஐ\' வந்தாலும் \'கத்தி\' ரிலீஸாவது உறுதி
களை கட்ட ஆரம்பித்துள்ள தீபாவளி ரேஸ்!
புலிப் பார்வை, கத்தியை தடை செய்ய வலுப்பெறுகிறது கோரிக்கை! 50 அமைப்புகள் ஒன்று கூடுகின்றன!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions