ஐ வசூல் விஷயத்தில் அள்ளிவிடும் தயாரிப்பாளர்!

Bookmark and Share

ஐ வசூல் விஷயத்தில் அள்ளிவிடும் தயாரிப்பாளர்!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்த 'ஐ' திரைப்படம்  பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.  வித்தியாசமான தோற்றம் மற்றும் நடிப்பில விக்ரம் மிரட்டியது, இதுவரை தமிழ்சினிமாவின் கேமரா படாத படப்பிடிப்புத்தளங்கள், ஏ.ஆர்.ரகுமானின் சிறப்பான இசை, பி.சி.ஸ்ரீராமின் கண்ணுக்குக் குளிர்ச்சியான ஒளிப்பதிவு என ஐ படத்தக்குக் கிடைத்த பாசிட்டிவ்வான விமர்சனம் பெரிய வெற்றியைக் கொடுத்தது.

அதே நேரம், சுஜாதா இல்லாததினால்  ஷங்கரால் விறுவிறுப்பான திரைக்கதை பண்ண முடியவில்லை எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தன. என்னதான் எதிர்மறை விமர்சனம் இருந்தாலும் விக்ரம் நடிப்பை ஒரு தடவை தியேட்டரில் பார்த்துவிடுவது என சாமான்ய மக்கள் எண்ணியதன் காரணமாக, குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தனர்.

ஷங்கரிக் பிரம்மாண்டத்தை  தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று மக்கள் எடுத்த முடிவும் ஐ படத்துக்கு பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்துவிட்டது. உலகளவில் முதல்நாளில் மட்டும் ஐ படம் 25 கோடிக்கும் மேல் வசூலித்ததாக சொல்லப்பட்டது. தற்போது  50 நாட்களைக் கடந்துள்ளநிலையில்  'ஐ' திரைப்படம் இதுவரை 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கும் என்கிறார்கள்.

ஐ படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிசந்திரனோ 300 கோடி வசூலித்திருப்பதாக அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறாராம். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப ஓவரா இருக்கே...!


Post your comment





Related News
ஐ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு மறுப்பு: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
விருது வரும் பின்னே, வேதனை வந்தது முன்னே!
ஐ வெற்றிப்படமா?
கேரளாவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் எது தெரியுமா?
தெலுங்கிலும் தொடர்ந்து அசத்தும் \'ஐ\'
\'ஐ\' வசூல் 200 கோடியைத் தாண்டுமா...?
ஐ - 5 நாட்களில் 78 கோடி வசூல்...உண்மையா?
பனிக்கூழ் பார்வை...
பொங்கல் படங்கள்... ஒரு முன்னோட்டம்
\'ஐ\' படத்தை தனியாக கவனிக்கும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions