ஐ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு மறுப்பு: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

Bookmark and Share

ஐ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு மறுப்பு: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

சென்னை ஐகோர்ட்டில், கடலூரை சேர்ந்த சுந்தரராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

நடிகர் விக்ரம் நடித்து, சங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தின் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதி விநியோக உரிமையை பெற்றுள்ளேன். பல ஆண்டுகளாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சினிமா தியேட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல், ரூ.20 முதல் ரூ.100 என்ற கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தமிழில் பெயர் வைத்துள்ள மற்றும் தமிழ் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமான திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி சலுகை வழங்குவது என்று கடந்த 2007ம் ஆண்டு புதுச்சேரி மாநில அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையின் அடிப்படையில் வரிச் சலுகை வழங்குவது குறித்த திரைப்படங்களை தேர்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி, ‘ஐ’ படத்துக்கு கேளிக்கை வரி வழங்க மறுத்து விட்டது.

‘ஐ’ என்ற சொல், ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் பேச்சு வழக்கு சொல் ஆகும். இந்தியாவில் எந்த ஒரு மொழியிலும் இல்லாத தனித்தன்மை வாய்ந்த ‘ஐ’ என்ற சொல் தமிழில் மட்டுமே உள்ளது. எனவே, இந்த படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு சலுகை வழங்க முடியாது என்று புதுச்சேரி மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.ஐ படத்துக்கு வரி சலுகை வழங்க புதுச்சேரி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் டி.டி.ரவிசந்திரன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி புதுச்சேரி மாநில அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தர விட்டார். 


Post your comment





Related News
விருது வரும் பின்னே, வேதனை வந்தது முன்னே!
ஐ வசூல் விஷயத்தில் அள்ளிவிடும் தயாரிப்பாளர்!
ஐ வெற்றிப்படமா?
கேரளாவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் எது தெரியுமா?
தெலுங்கிலும் தொடர்ந்து அசத்தும் \'ஐ\'
\'ஐ\' வசூல் 200 கோடியைத் தாண்டுமா...?
ஐ - 5 நாட்களில் 78 கோடி வசூல்...உண்மையா?
பனிக்கூழ் பார்வை...
பொங்கல் படங்கள்... ஒரு முன்னோட்டம்
\'ஐ\' படத்தை தனியாக கவனிக்கும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions