'ஐ' வசூல் 200 கோடியைத் தாண்டுமா...?

Bookmark and Share

'ஐ' வசூல் 200 கோடியைத் தாண்டுமா...?

பொங்கலுக்கு ஒரு நாள் முன்னதாகவே வெளியான 'ஐ' திரைப்படம் 10 நாட்களைக் கடந்த பின்னும் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் முதல் நாளன்று வெளியான திரையரங்குகளில் ஏறக்குறைய அதே அளவிற்கு திரையரங்குகள் இரண்டாவது வாரத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறதாம்.

பொங்கல் விடுமுறை தினத்தில் மட்டுமே, அதாவது படம் வெளியான ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 130 கோடி ரூபாய் அளவிற்கு 'ஐ'  படம் வசூலித்திருக்கும் என்று முதலில் சொல்லப்பட்டது.

அதன் பின் கடந்த ஐந்து நாட்களாக ஓரளவிற்கு வசூல் குறைந்திருந்தாலும் பல திரையரங்குகளில் 70 சதவீத அளவிற்கு நிரம்பியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஐ'  படத்திற்குப் போட்டியாக வேறு எந்தப் படமும் வெளிவராத நிலையில் இந்த வாரம் மொத்தம் உள்ள மூன்று விடுமுறை நாட்களிலும் பல திரையரங்குகளில் படம் ஏற்கெனவே புக்கிங் செய்ப்பட்டுவிட்டதாம்.

சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாட்களும் விடுமுறை என்பதால் இந்த நாட்களிலும் படத்தின் வசூல் முதல் வாரம் போலவே கணிசமாக உயர்ந்து விடும் என்கிறார்கள். இந்த விடுமுறை நாட்களையும் சேர்த்து கணக்கிடும் போது 'ஐ'  படத்தின் வசூல் 200 கோடியைத் தொட வாய்ப்பிருப்பதாகவும் கணக்கிட்டுச் சொல்கிறார்கள்.

அஜித் நடிக்கும் 'என்னை அறிந்தால்' படமும் பிப்ரவரி மாதம் தள்ளி வைக்கப்பட்டுவிட்டதால் அதுவரை 'ஐ'  படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்தால் 'எந்திரன்' வசூலையும் முறிடியக்க வாய்ப்பிருக்கும் என்கிறார்கள்.


Post your comment





Related News
ஐ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு மறுப்பு: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
விருது வரும் பின்னே, வேதனை வந்தது முன்னே!
ஐ வசூல் விஷயத்தில் அள்ளிவிடும் தயாரிப்பாளர்!
ஐ வெற்றிப்படமா?
கேரளாவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் எது தெரியுமா?
தெலுங்கிலும் தொடர்ந்து அசத்தும் \'ஐ\'
ஐ - 5 நாட்களில் 78 கோடி வசூல்...உண்மையா?
பனிக்கூழ் பார்வை...
பொங்கல் படங்கள்... ஒரு முன்னோட்டம்
\'ஐ\' படத்தை தனியாக கவனிக்கும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions