ஐ வெற்றிப்படமா?

Bookmark and Share

ஐ வெற்றிப்படமா?

ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் எமி ஜாக்சன் நடித்த ஐ படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஐ படம் சிறப்பாக இருப்பதாக ஒரு சாரரும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று இன்னொரு சாரரும் கருத்து தெரிவித்தனர்.

அதன் காரணமாக ஐ வெற்றிப்படமா தோல்விப்படமா என்பதில் குழப்பம் நீடித்தது.  இந்நிலையில் உலகம் முழுக்க வெளியான ஐ படம் வெற்றியா தோல்வியா என்பதற்கான விடை தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஐ படம் வெற்றிப்படம்தான். வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபத்தைக் கொடுத்திருக்கிறது. தியேட்டர்காரர்களுக்கும் கணிசமான ஷேர் கிடைத்திருக்கிறது.

தமிழ்நாட்டைவிட கேரளாவிலும், வெளிநாட்டிலும் மிகப்பெரிய வெற்றியடைந்த ஐ படம் கர்நாடகாவில் சுமாராகவே ஓடி இருக்கிறது. இதற்கு நேர்மாறாக ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும், வட மாநிலங்களிலும் படு தோல்வியை சந்தித்து இருக்கிறது.

அதோடு ஐ படம் உலகம் முழுக்க வசூல் செய்த தொகையும் தெரிய வந்திருக்கிறது. உலகம் முழுக்க 227 கோடி ரூபாயை ஐ படம் வசூல் செய்துள்ளதாம்.


Post your comment

Related News
ஐ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு மறுப்பு: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
விருது வரும் பின்னே, வேதனை வந்தது முன்னே!
ஐ வசூல் விஷயத்தில் அள்ளிவிடும் தயாரிப்பாளர்!
கேரளாவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் எது தெரியுமா?
தெலுங்கிலும் தொடர்ந்து அசத்தும் \'ஐ\'
\'ஐ\' வசூல் 200 கோடியைத் தாண்டுமா...?
ஐ - 5 நாட்களில் 78 கோடி வசூல்...உண்மையா?
பனிக்கூழ் பார்வை...
பொங்கல் படங்கள்... ஒரு முன்னோட்டம்
\'ஐ\' படத்தை தனியாக கவனிக்கும் தனுஷ்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions