தெலுங்கிலும் தொடர்ந்து அசத்தும் 'ஐ'

Bookmark and Share

தெலுங்கிலும் தொடர்ந்து அசத்தும் 'ஐ'

'ஐ' திரைப்படம் தமிழில் வெளியான அன்றே தெலுங்கிலும் வெளியானது. அங்கு ஆரம்பத்தில் படத்தைப் பற்றிய பேச்சுக்கள் எதிர்மறையாக இருந்த காரணத்தால் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறாது என்றே சொன்னார்கள்.

ஆனால், பலரின் கணிப்புக்களையும் பொய்யாக்கி'ஐ'  படம் இன்று வரை நல்ல வசூலைப் பெற்று வருகிறது. அது மட்டுமல்ல தெலுங்கில் வெங்கடேஷ், பவன் கல்யாண் நடித்த 'கோபாலா கோபாலா' படத்தின் வசூலையும் சில ஏரியாக்களில் மிஞ்சி விட்டது என்கிறார்கள்.

'ஐ' படத்தின் வெற்றியால்தான் அந்தப் படத்தின் வசூல் பாதிப்படைந்தது என்கிறார்கள். ’கோபாலா கோபாலா’ படத்தின் தயாரிப்பாளர்கள் 'ஐ' படத்தின் வசூலைப் பார்த்து கடுப்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனால், தெலுங்கு நேரடிப் படங்கள் வரும் போது டப்பிங் படங்கள் வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

சுமார் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் ஆன 'ஐ' திரைப்படம் அதற்கும் மேலாக சுமார் 40 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

’கோபாலா கோபாலா’ படத்தின் வசூல் 50 கோடியை நெருங்கி வந்திருந்தாலும் 'ஐ' படம் வெளிவராமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமாக வசூலித்திருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

ஒரு டப்பிங் திரைப்படம் நேரடிப் படங்களை விட அதிகமாக வசூல் பெறுவது தெலுங்குத் திரையுலகில் ஆச்சரியமான விஷயமல்ல. இதற்கு முன் ’எந்திரன்’ திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பே நல்ல வசூலைப் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

தற்போதுள்ள சூழ்நிலையில் ’எந்திரன்’ கொடுத்த லாபத்தைவிட 'ஐ' படம் அதிக லாபத்தைத் தருமா என்றுதான் பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.


Post your comment





Related News
ஐ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு மறுப்பு: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
விருது வரும் பின்னே, வேதனை வந்தது முன்னே!
ஐ வசூல் விஷயத்தில் அள்ளிவிடும் தயாரிப்பாளர்!
ஐ வெற்றிப்படமா?
கேரளாவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் எது தெரியுமா?
\'ஐ\' வசூல் 200 கோடியைத் தாண்டுமா...?
ஐ - 5 நாட்களில் 78 கோடி வசூல்...உண்மையா?
பனிக்கூழ் பார்வை...
பொங்கல் படங்கள்... ஒரு முன்னோட்டம்
\'ஐ\' படத்தை தனியாக கவனிக்கும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions