வசூலில் சாதனை படைக்கும் ஏர் லிப்ட்

Bookmark and Share

வசூலில் சாதனை படைக்கும் ஏர் லிப்ட்

பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்களில் வெளிவந்த படம் ‘ஏர் லிப்ட்’. ‘கப்பார் இஸ் பேக்’, ‘பிரதர்ஸ்’ ஆகிய வெற்றிப்படங்களுக்கு பிறகு வெளிவரும் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

அந்த எதிர்பார்ப்பை எல்லாம் இப்படம் பூர்த்தி செய்துள்ளது என்று சொல்லலாம். 1990-ஆம் ஆண்டு குவைத்துக்கும் ஈராக்குக்கும் இடையே நடைபெற்ற போரின் போது சிக்கிக்கொண்ட இந்தியர்களை எப்படி மீட்டுக் கொண்டு வந்தார்கள் என்ற உண்மை கதையை வைத்து இப்படத்தை படமாக்கியிருக்கிறார் ராஜா கிருஷ்ணா மேனன்.

மிகவும் திரில்லிங்காவும், அழகாகவும் இயக்கியிருந்தார். மேலும், இப்படத்தின் நாயகியாக நிர்மத் கவுர் நடித்திருந்தார். 

இப்படம் வெளியான முதல் 2 நாட்களிலேயே ரூ.26.95 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதை வைத்தே இப்படம் ரசிகர்களை இப்படம் எப்படி கவர்ந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

தொடர்ந்து இப்படம் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாகவே சென்று கொண்டிருப்பதால் கண்டிப்பாக வசூலில் பெரிய சாதனையை படைக்கும் என நம்பலாம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions