பெங்காலிக்கு சென்ற சிறுவாணி பட நாயகி ஐஸ்வர்யா!

Bookmark and Share

பெங்காலிக்கு சென்ற சிறுவாணி பட நாயகி ஐஸ்வர்யா!

முதன்முதலாய், சிறுவாணி உள்பட சில படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா. பெங்காலி நடிகையான இவர், தமிழில் ஒரு பெரிய இடத்தை பிடித்து விட வேண்டும் என்று தான் நடித்த படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வந்தார்.

ஆனபோதும் அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் ஐஸ்வர்யாவின் நடிப்பு பேசப்படவில்லை. இந்த நிலையில், கடைசியாக நடித்த சிறுவாணி படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் அவர்.

சமீபத்தில் அப்படம் வெளியானபோது படத்தின் ப்ரமோஷனுக்காக சென்னை வந்திருந்த ஐஸ்வர்யா, அந்த படத்தை பார்க்க வந்திருந்த சில கோடம்பாக்க டைரக்டர்களிடம் தனக்கு சான்ஸ் தருமாறு ஆதரவு திரட்டியிருக்கிறார்.

ஆனபோதும், அவர்களிடமிருந்து சரியான பதில் வரவில்லையாம். அதனால் படம் வெளியாகி சில நாட்கள் வரை சென்னையில் இருந்த ஐஸ்வர்யா, தற்போது தமிழ் சினிமா மீதான நம்பிக்கையை இழந்து விட்டவர், தனது தாய்மொழியான பெங்காலியில் ஒரு படத்தில் கமிட்டாகி தற்போது நடித்துக்கொண்டிருக்கிறாராம்.

இனிமேல் தமிழில் இருந்து வாய்ப்புகள் தேடிச்சென்றால் மட்டுமே கோலிவுட்டுக்கு வருவாராம். இல்லையேல் முழுநேர பெங்காலி நடிகையாகி விடுவாராம் ஐஸ்வர்யா.


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்
யாஷிகா சொன்ன ஒரு வார்த்தை! கதறி அழுத ஐஸ்வர்யா! இப்படி மாறிவிட்டார்களே?
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நான் என்ன பொம்மையா? ஐஸ்வர்யா-ரித்விகா சண்டை! இரண்டாக பிரிந்த பிக்பாஸ் வீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions