விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்

Bookmark and Share

விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்

கன்னட நடிகை சுருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த புகாருக்கு அர்ஜுன் மகளும். நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எதன் அடிப்படையில் என் தந்தை மீது சுருதி பாலியல் புகார் கூறுகிறார். நானும் ஒரு நடிகைதான். எனக்கு அனுபவம் மிகக் குறைவுதான். ஆனால் படத்தில் காதல் காட்சிகள் படமாக்கப்படும்போது என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். என் தந்தை இயக்கிய ஒரு படத்தில் நான் நடித்திருக்கிறேன்.

காதல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை உதவி இயக்குனருடன் சேர்ந்து என் தந்தை எனக்கு நடித்துக் காண்பித்தார். உதவி இயக்குனருடன் அன்று அவர் நெருக்கமாக நடித்ததால் அந்த நபர் வெளியே வந்து அர்ஜூன் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சொல்ல முடியுமா?.

இவையெல்லாமே நடிகர், நடிகையரின் வேலையில் ஒரு பகுதியாகும். அத்தனை பேர் முன்னிலையில் என் தந்தை எப்படி அத்துமீறி இருக்க முடியும். அப்படி என் தந்தை தவறு செய்திருந்தால் படப்பிடிப்பின் போதே சொல்லியிருக்கலாமே.

என் தந்தை இரவு விருந்துக்கு அழைத்ததாக சுருதி சொல்கிறார். அதற்கெல்லாம் என் தந்தைக்கு ஏது நேரம். அவர் பப்புக்கோ, வேறு சொகுசு விடுதிகளுக்கோ போவதே கிடையாது. விஸ்மயா படம் குறித்து என்னிடமும் என் சகோதரியிடமும் என் தந்தை பேசிக்கொண்டிருந்தபோது படத்தில் நெருக்கமான காட்சிகள் இருப்பதாக இயக்குனர் கூறியதாகச் சொன்னார்.

மேலும் அந்தக் காட்சிகளை குறைக்குமாறு சொல்லியிருப்பதாகவும் கூறினார். சுருதி முன்வைத்துள்ள அர்த்தமற்ற புகாரால் என் தந்தை அவரை நினைத்து வருத்தப்படவில்லை. எங்களை நினைத்தும் எங்கள் மனநிலையை நினைத்தும் தான் வருந்துகிறார்.

பாலியல் துன்புறுத்தல் என்பது மிகவும் வலுவான வார்த்தை. சுருதி அதைப் பயன்படுத்துவதற்கு முன் யோசித்திருக்க வேண்டும்.

ஒரு பெண்ணாக மீடூ என்னும் இயக்கத்தை நான் மதிக்கிறேன். ஆனால் சுருதி போன்றவர்கள் விளம்பரத்துக்காக பொய் புகார் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஸ்ருதிக்கு எதிராக என் தந்தை சட்டப்படி கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்வார்.

இவ்வாறு அவர் கூறினார். 


Post your comment





Related News
பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்
யாஷிகா சொன்ன ஒரு வார்த்தை! கதறி அழுத ஐஸ்வர்யா! இப்படி மாறிவிட்டார்களே?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions