சேலையில் எளிமையாக இருப்பது எனக்கு பிடிக்கும்: ஐஸ்வர்யாராய்

Bookmark and Share

சேலையில் எளிமையாக இருப்பது எனக்கு பிடிக்கும்: ஐஸ்வர்யாராய்

ஐஸ்வர்யாராய் உலக அழகி பட்டம் வென்று 21 வருடங்கள் ஆகிறது. 2007-ல் அபிஷேக்பச்சனை மணந்தார். இவர்களுக்கு 4 வயதில் ஆரத்யா என்ற மகள் இருக்கிறாள். குழந்தை பிறந்த பின் சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இரண்டு இந்திப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். தனக்கு பிடித்த விஷயங்கள் குறித்து ஐஸ்வர்யாராய் மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

‘‘எனக்கு விதவிதமான கைக்கடிகாரங்கள் ரொம்ப பிடிக்கும். வெளிநாடுகளுக்கு போகும்போதெல்லாம் அவற்றை வாங்கி வருவேன். வீட்டில் நிறைய கைக்கடிகாரங்களை குவித்து வைத்துள்ளேன். உடைகளுக்கு பொருத்தமான கைக்கடிகாரங்களை அணிந்து கொண்டு வெளியே செல்வேன். எனக்கு பிடித்த நிறம் கருப்பு. அத்துடன் நீலம், வெள்ளை நிறங்களையும் விரும்புவேன். எந்த ஆடைகளை அணிந்தாலும், இந்த நிறங்கள் அவற்றில் இருப்பது போல் பார்த்துக்கொள்வேன்.

சேலைகள் அணிந்து எளிமையாக இருப்பது பிடிக்கும். நீண்ட கவுன், சுடிதாரையும் விரும்பி அணிவேன். எனக்கு பிடித்த நடிகர் அமிதாப்பச்சன். நடிகைகளில் நர்கீசை பிடிக்கும். தாய்லாந்து, சைனீஸ் உணவுகளை பார்த்தால் விட மாட்டேன் வெளுத்து கட்டுவேன். அப்படி அந்த உணவுகள் மீது எனக்கு இஷ்டம். எப்போதாவது சோர்வாக இருந்தால், மசாஜ் செய்து குளிப்பேன்.

அதன் பிறகு நல்ல தூக்கம் போட்டு எழுவேன். அப்போது முகத்தில் புதிய மினுமினுப்பு வரும். என்னை சுற்றி எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். பண்டிகை காலங்களில் படப்பிடிப்பு இருக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பேன். அந்த நாட்களில் குடும்பத்தோடு புதுபுது இனிப்புகள் செய்து சாப்பிடுவேன். எனக்கு பிடித்தது பிரான்ஸ். அங்கு அழகு நிலையங்களில் முகத்தை ஒயின் மூலம் அழகு படுத்துவது பிரபலம். அந்த நாட்டுக்கு போகும்போதெல்லாம் நான் ‘ஒயின் பேசியல்’ செய்துகொள்வேன்.’’

இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார். 


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions