குழந்தைகளுடன் டூர் செல்லும் ஐஸ்வர்யா தனுஷ்!

Bookmark and Share

குழந்தைகளுடன் டூர் செல்லும் ஐஸ்வர்யா தனுஷ்!

3 என்ற படத்தில் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் ஐஸ்வர்யா தனுஷ். அந்த படம் சுமாரான வெற்றிதான் என்றாலும், அவர் சோர்ந்து விடவில்லை. அடுத்து பெரிய ஹிட் கொடுப்பேன் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் கதையை ரெடி பண்ணி, ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் வை ராஜா வை படத்தை இயக்கினார்.

மேலும், இந்த படத்தில் தனுஷ்-டாப்சியை கெஸ்ட் ரோல்களில் நடிக்க வைக்க வேண்டும் என்பது முன்பே திட்டமிட்டிருந்த விசயம் என்றாலும், பின்னர் அவர்களது கேரக்டர்களை இன்னும் பெருசுபடுத்தி படத்துக்கு புதிய பலம் சேர்த்தார்.

அதேபோல், எஸ்.ஜே.சூர்யா ஆடியிருக்கும் பாடலைப்பற்றி முதலில் யோசிக்கவே இல்லையாம். மொத்த காட்சிகளையும் படமாக்கிய பிறகுதான் இப்படியொரு பாடல் வைத்தால் என்ன என்ற யோசனை தோன்ற அவரிடம் கேட்டாராம்.

அவரும் கண்டிப்பாக ஆடுகிறேன் என்று சொன்னதையடுத்து பிலிம் சிட்டியில் அந்த பாடலை படமாக்கியிருக்கிறார்.  இந்த நிலையில், அடுத்த பட வேலைகளை எப்போது தொடங்குகிறீர்கள்? என்று அவரைக்கேட்டால், இந்த படவேலைகளில் இறங்கியதில் இருந்து குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட முடியவில்லை.

அதனால், கோடை விடுமுறையை அவர்களுடன் ஜாலியாக கழிக்கப்போகிறேன். அதனால் அவர்கள் விரும்பும் வெளிநாடுகளுக்கு டூர் செல்லப்போகிறேன். அது முடிந்து வந்தபிறகுதான் அடுத்து எந்த மாதிரியான படம் பண்ணலாம் என்பது பற்றி முடிவெடுப்பேன் என்கிறார் ஐஸ்வர்யா.


Post your comment





Related News
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions