என்னை கவர்ந்த கொக்கி குமாரு... ஐஸ்வர்யா தனுஷ்!

Bookmark and Share

என்னை கவர்ந்த கொக்கி குமாரு... ஐஸ்வர்யா தனுஷ்!

தனது கணவர் தனுஷை ஹீரோவாக வைத்து, 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. முதல்படமே ஐஸ்வர்யாவுக்கு ஓரளவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

குறிப்பாக அந்தப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல்... உலகளவில் பிரபலமானது. 3 படத்திற்கு பிறகு 'வை ராஜா வை' என்ற படத்தை இயக்கியுள்ளார். கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்சி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மதன்கார்கி பாடல்கள் எழுத, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தில், கமலின், 'உத்தம வில்லன்' படத்துடன் களம் இறங்குகிறது. இப்படம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்ட ஐஸ்வர்யா தனுஷ், தமிழ் படங்களில் இந்தப்படம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.

கெளதம், யூத்புல்லான ரோலில் நடித்துள்ளார். கடல் படத்தில் மணிரத்னம் அறிமுகப்படுத்தியதால் நிச்சயம் சரியாக இருக்கும் என்று எண்ணி தான் இப்படத்தில் நடிக்க வைத்தேன். கெளதம் ஒரு ஜூனியர் கார்த்திக் தான்.

அவர் எப்படி படப்பிடிப்புகளில் அரட்டை, கலாட்டா என்று இருப்பாரோ அதேப்போன்று தான் கெளதமும் இருக்கிறார். இப்படம் ஆரம்பிக்கும்போதே நான் தேர்வு செய்த முதல் இரண்டு பேர் ப்ரியா ஆனந்த் மற்றும் சதீஷ்.

என்னுடைய பட ரோலுக்கு அவர்கள் தான் சரியாக வருவார்கள் என்று எண்ணி அவர்களை தேர்வு செய்தேன். வை ராஜா வை படத்தில் என்னை கவர்ந்த ஒரு கேரக்டர் கொக்கி குமார்.

இந்த ரோலில் என் கணவர் தனுஷை நடிக்க வைக்க எண்ணி அவரிடம் சொன்னேன். இந்தி உள்ளிட்ட தனது படங்களில் பிஸியாக இருந்தபோதும் எனக்காக நடித்து கொடுத்தார்.

அதேப்போன்று என்னை கவர்ந்த மற்றொரு நடிகர் கம் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. அவரது படங்கள் எனக்கு பிடிக்கும். இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு அவரை ஆட வைத்திருக்கிறேன். அவரும் சிறப்பாக ஆடி-நடித்து கொடுத்துள்ளார்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions