ஐஸ்வர்யா தனுஷின் உதவியாளர் இயக்கும் ஹீரோ, ஹீரோயிசம் இல்லாத படம்

Bookmark and Share

ஐஸ்வர்யா தனுஷின் உதவியாளர் இயக்கும் ஹீரோ, ஹீரோயிசம் இல்லாத படம்

பொதுவாக  சினிமாவில் கதைகள்  கதாநாயகனை மையப்படுத்தியே சுழல்கின்றன. நாயகன்தான்  பிரதானம். அவனைச் சுற்றும் துணைக்கோள்கள் போலவே பிற பாத்திரங்கள் அமைக்கப்படும். இதுவே சினிமா மரபாகி இருக்கிறது.

ஆனால் ஹீரோவும் இல்லாமல் ஹீரோயிசமும் இல்லாமல் ஒரு கதை அமைக்கப்பட்டு ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ‘தேவதாஸ் பிரதர்ஸ்’ என்று பெயர் வைத்துள்ளனர். 

இப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ், சற்குணம், வேல்ராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கே.ஞானகிராமன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் ‘திலகர்’ துருவா, பாலசரவணன், அஜய் பிரசாத், ‘மெட்ராஸ்’ ஜானி ஆகிய நால்வரும் சமபங்குடன் நடித்து வருகிறார்கள். நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். 

இக்கதை முழுக்க முழுக்க சென்னையிலேயே நடக்கிறது. சென்னையில் அடையாறு, ஆழ்வார் பேட்டை, கே.கே.நகர், வியாசர்பாடி ஆகிய நான்கு வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் இளைஞர்கள் ஒருவரையொருவர் அறியாமலேயே ஒருவர் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அது தெரிந்த பிறகு அவரவர் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதை படத்தின் கதையாக கொண்டு, படமாக்கி வருகிறார்கள். 

இப்படத்திற்கு தரண் இசையமைக்கிறார். சலீம் படத்தின் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஆர்.மதியழகன், ஆர்.ரம்யா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions