பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: ஐஸ்வர்யா தனுஷ்

Bookmark and Share

பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: ஐஸ்வர்யா தனுஷ்

பெங்களூரு பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு ஆகியவை சார்பில் ‘அவளுக்காக அவன்‘ என்ற தலைப்பிலான 3 நாட்கள் கருத்தரங்கு பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கை பெங்களூரு மாநகராட்சி மேயர் பத்மாவதி தொடங்கி வைத்து பேசியதாவது:-பாலின சமத்துவம் என்பது வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டும். பாலின சமத்துவம் பற்றி அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பழங்காலத்தில் பெண்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து உள்ளது.பெங்களூரு மாநகராட்சியில் 198 வார்டுகள் உள்ளன. இதில் 101 கவுன்சிலர்கள் பெண்கள் ஆவார்கள். இதில் இட ஒதுக்கீட்டை விட அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் கவுன்சிலர்களாக உள்ளனர்.

33 சதவீத இட ஒதுக்கீட்டின்படி பார்த்தால் மாநகராட்சியில் தற்போது 66 கவுன்சிலர்கள் மட்டுமே இருந்து இருப்பார்கள்.பெண்களுக்கு சம உரிமையை ஒதுக்கி கொடுத்து அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை போலவே, பாராளுமன்றம், சட்டமன்றத்திலும் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும்.இவ்வாறு மேயர் பத்மாவதி பேசினார்.

அதைத்தொடர்ந்து பேசிய நடிகை ரம்யா, “இந்த சமுதாயத்தில் பெண்கள் பற்றிய மனநிலை மாற வேண்டும். பெண்களை மரியாதையுடன் பார்க்க வேண்டும். சம உரிமை, சம வாய்ப்புகள் கிடைக்கும்போது பெண்களும் சாதிக்க முடியும். கலாசாரத்தின் பெயரில் பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல“ என்றார்.

தமிழ் திரைப்பட இயக்குனரும், ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் அமைப்பின் தூதரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா பேசும்போது, “குழந்தை பருவத்திலேயே பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆண்-பெண் சமமானவர்கள். இவர்களில் யாரும் மேலானவர்கள் இல்லை என்பதை குழந்தைகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். பெண்களின் மரியாதையை தூக்கி நிறுத்தும் இந்த முயற்சியை அனைவரும் ஆதரிக்க வேண்டும். பெண்களை மதிக்கும் தன்மை முதலில் வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டும்“ என்றார். 

 


Post your comment

Related News
கணவர் அபிஷேக் படத்தை நிராகரித்த ஐஸ்வர்யா ராய்! இதுதான் விசயமா
மணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்களா?
மேக்கப் ரூமில் சண்டை, முரண்டுபிடித்த ஹீரோயின்கள்: கடுப்பான இயக்குனர்
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
ஐஸ்வர்யா ராய் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி
சிரஞ்சீவிக்கு ஜோடியான பிரபல உலக அழகி
2.0வில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறாரா, இல்லையா? புதிய தகவல்
இந்த நடிகைக்கு வந்த திடீர் வாழ்வை பாரு: வியக்கும் சக நடிகைகள்
தனுசுடன் நடிக்கும் கனவு நனவாகி விட்டது: ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராய், ஹேமமாலினிக்கு மிக உயரிய விருதுAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions