என்னை தைரியமாக நடிக்க வைத்தவர் ஐஸ்வர்யா - வஸந்த்!

Bookmark and Share

என்னை தைரியமாக நடிக்க வைத்தவர் ஐஸ்வர்யா - வஸந்த்!

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவியாளர்களாக பணியாற்றியவர்களில் இயக்குநர் வஸந்த் முக்கியமானவர். கேளடி கண்மணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வஸந்த், ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், ரிதம், சத்தம் போடாதே உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இயக்கிய படங்கள் குறைவு தான் என்றாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் வஸந்த். இதுநாள் வரை இயக்குநராக இருந்து வந்த வஸந்த், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், கெளதம் கார்த்திக் நடித்துள்ள, வை ராஜா வை படத்தில் கெளதமின் அப்பாவாக நடித்துள்ளார்.

வஸந்த் இதற்கு முன் சில படங்களில் சின்ன சின்ன ரோலில் தலைகாட்டியுள்ளார், ஆனால் வை ராஜா வை படத்தில் தான் முதன்முறையாக ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நம்மிடம் வஸந்த் பேசுகையில், எனக்கு பிறரை நடிக்க வைத்து தான் பழக்கம். ஆனால் என்னையும் நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

இந்த ரோலில் நான் நடிக்க மாட்டேன் என்றேன். ஆனால் ஐஸ்வர்யா தான், ஒற்றை காலில் நின்று இப்படத்தில் நடிக்க வைத்தார். ஆரம்பத்தில் நடித்தபோது கொஞ்சம் பயமாக இருந்தது.

ஆனால் எனக்கு தைரியம் தந்தவர் ஐஸ்வர்யா. இந்தப்படத்தில் நடித்த பிறகு என்னாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன் என்று கூறினார்.

 


Post your comment





Related News
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions