வெண்ணிலா கபடிக்குழு 2-வில் ஐஸ்வர்யா தத்தா?

Bookmark and Share

வெண்ணிலா கபடிக்குழு 2-வில் ஐஸ்வர்யா தத்தா?

சுசீந்திரன் இயக்கிய முதல் படம் வெண்ணிலா கபடிக்குழு. இந்த படத்தில் விஷ்ணு நாயகனாக அறிமுகமானார். அவர்களுடன் அப்புக்குட்டி, சூரி உள்பட பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் சூரி நடித்த புரோட்டா காமெடி பெரிய அளவில் ரீச் ஆனது. அதோடு அவருக்கும் மார்க்கெட்டில் ஒரு இடத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அதன்பிறகு அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை, பாண்டியநாடு உள்பட பல படங்களை இயக்கிய சுசீந்திரன் இப்போது விஷால் நடிப்பில் பாயும் புலி படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படமும் மதுரை மண்வாசனை கதையில் உருவாகி வருகிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல்அகர்வால், ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகின்றனர். இவர்களில் ஐஸ்வர்யா தத்தாவின் நடிப்பும் சில இடங்களில் சுசீந்திரனை வெகுவாக கவர்ந்து விட்டதாம்.

அதனால் தான் அடுத்தபடியாக இயக்கும் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் 2-ம் பாகத்தில் ஐஸ்வர்யா தத்தாவையே நாயகியாக நடிக்க வைக்க பரிசீலணை செய்து கொண்டிருக்கிறாராம். அதோடு அந்த படத்திலும் விஷ்ணு ஹீரோவாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions