பெங்காலி மொழியில் நடிக்க முயற்சிக்கும் ஐஸ்வர்யா தத்தா!

Bookmark and Share

பெங்காலி மொழியில் நடிக்க முயற்சிக்கும் ஐஸ்வர்யா தத்தா!

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படத்தில் அவர் பெயரளவுக்கு மட்டுமே கதாநாயகியாக நடித்தார். மற்றபடி பர்பார்மென்ஸ் பண்ணுவதற்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அடுத்தபடியாக சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள பாயும் புலி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. இதே படத்தில் காஜல்அகர்வால் ஹீரோயின் என்பதால் விஷாலுடன் இவருக்கு டூயட் இல்லை என்றபோதும், போலீசாக நடிக்கும் விஷாலுக்கு உதவி செய்யும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளாராம்.

இதையடுத்து, சமுத்திரகனி நடித்த ராவா என்ற படத்தில் நாயகியாக நடித்து வந்தார் அவர். ஆனால் அப்படத்தை இயக்குனர் சரியாக படமாக்காததால் கிடப்பில் போட்டு விட்டனர்.

அடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களும் கிடைக்காததால் தற்போது பெங்காலி மொழிப்படங்களில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம் அவர். பாயும்புலி படத்தில் நடித்து முடித்ததும் தனது அக்காள் திருமணத்திற்காக சொந்த ஊரான கொல்கத்தா செல்வதாக கூறிவிட்டு சென்ற ஐஸ்வர்யா தத்தா ஒரு மாதமாகியும் இன்னும் சென்னை திரும்பவில்லை.

இங்கிருக்கும் அவரது மேனேஜர்கள் சில படங்கள் இருப்பதாக சொன்னபோது, பாயும்புலி வந்த பிறகு புதிய படங்களில் கமிட்டாகலாம் என்று கூறிவிட்டாராம்.


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்
யாஷிகா சொன்ன ஒரு வார்த்தை! கதறி அழுத ஐஸ்வர்யா! இப்படி மாறிவிட்டார்களே?
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நான் என்ன பொம்மையா? ஐஸ்வர்யா-ரித்விகா சண்டை! இரண்டாக பிரிந்த பிக்பாஸ் வீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions