இன்சூரன்சு ஏஜெண்டாக பணிபுரியும் ஐஸ்வர்யா தத்தா!

Bookmark and Share

இன்சூரன்சு ஏஜெண்டாக பணிபுரியும் ஐஸ்வர்யா தத்தா!

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்‘ படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்துக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

பெங்காலி நடிகையான இவர் அருள் நிதியின் ‘ஆறாது சினம்‘ படத்திலும் நடித்தார். இந்த படங்களில் இரண்டு நாயகிகளில் ஒருவராக வந்தார். இப்போது துருவா கதாநாயகனாக நடிக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் அவரது ஜோடியாக நடித்து வருகிறார்.

இதில் தனி கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. சினிமா வருமானம் வருகிறது. என்றாலும் இன்சூரன்சு ஏஜெண்டாகவும் ஐஸ்வர்யா தத்தா இருந்து வருகிறார். இதுபற்றி கேட்ட போது..

“நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே எல்.ஐ.சி ஏஜெண்டாகி விட்டேன். எனக்கு தெரிந்தவர்களிடம் இன்சூரன்சு பாலிசி பிடித்து வருகிறேன். இப்போது நான் கதாநாயகியாக நடித்து வருகிறேன். ஆனால் இன்சூரன்சு ஏஜெண்ட் ஆக இருப்பதை கைவிடும் எண்ணம் இல்லை.

எதிர்காலத்தில் எனக்கு கீழே நிறைய பேரை நியமித்து அவர்கள் மூலம் பாலிசி பிடிப்பேன். அதை ஒரு நிறுவனம் போல நடத்தும் எண்ணம் இருக்கிறது” என்றார்.


Post your comment





Related News
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions