சென்னையில் செட்டிலான ஐஸ்வர்யா தத்தா!

Bookmark and Share

சென்னையில் செட்டிலான ஐஸ்வர்யா தத்தா!

நகுல், தினேஷ் நடித்து வெளியான படம் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும். இந்த படத்தில் அவர்களுக்கு ஜோடிகளாக பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்தனர். இதில் நகுலுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா தத்தா கொல்கத்தாவை சேர்ந்தவர்.

ஆனபோதும், அந்த படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டதால், தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராக நடிக்கிறார் அவர்.

இதே படத்தில் காஜல்அகர்வாலும் ஹீரோயினியாக நடித்தபோதும் ஐஸ்வர்யா தத்தாவுக்கும் அவருக்கு இணையான வேடத்தை கொடுத்துள்ளாராம் சுசீந்திரன். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் சிட்டி கேர்ளாக மாடர்ன் கெட்டப்பில் நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா மொத்தம் 25 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் சென்னையில் அப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது விஷாலுடன் அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விரைவில் மதுரையில் நடக்கும் படப்பிடிப்புக்கு செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறார் அவர்.

இந்த நிலையில், இனிமேல் நான் முழுநேர தமிழ் நடிகையாகப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு சென்னையில் ஒரு ப்ளாட் பார்த்து அதில் குடியேறியிருக்கிறார் ஐஸ்வர்யாதத்தா.

அதோடு தனக்கு நன்றாக தமிழ் பேச தெரியும் என்பதுதான் தன்னை சந்திப்பவர்களிடம் அவர் தமிழிலேயே பேசி வருகிறார். அதனால் இதுவரை தமிழ் பேச தெரியாத கொல்கத்தா நடிகை என்று அவரை விட்டு தள்ளி நின்ற இயக்குனர்கள் இப்போது நன்றாக தமிழ் தெரிந்த நடிகை என்பதை அறிந்து ஐஸ்வர்யா தத்தாவுடன் ஆர்வத்துடன் கதை சொல்லி வருகின்றனர்.

அதனால், விஷால் படத்தில் நடித்து முடிப்பதற்குள் அரை டஜன் படங்களில் கமிட்டாகி விட வேண்டும் என்று விழுந்து விழுந்து கதை கேட்டுக்கொண்டிக்கிறார் ஐஸ்வர்யா தத்தா.


Post your comment





Related News
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions