என் வளர்ச்சியை தடுக்க சதி! ஐஸ்வர்யா தத்தா ஆவேசம்!!

Bookmark and Share

என் வளர்ச்சியை தடுக்க சதி! ஐஸ்வர்யா தத்தா ஆவேசம்!!

சமீபத்தில் வெளியான தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் என்ற படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதையடுத்து இப்போது சுசீந்திரன் இயக்கத்தில விஷால் நடித்து வரும் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் முதல் படத்தை விட ஒரு அழுத்தமான வேடத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. இதையடுத்தும் சில படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையிலும் இறங்கியிருக்கும் அவர், தனக்கென்று இன்னும் ஒரு மார்க்கெட் உருவாகவில்லை என்பதால் புதிதாக கமிட்டாகும் கம்பெனிகளிடம் இத்தனை லட்சம் சம்பளம் வேண்டும் என்று கேட்காமல், கொடுப்பதை வாங்கிக்கொண்டு வருகிறார்.

ஆனால் இந்த நேரத்தில், ஐஸ்வர்யா தத்தா 16 லட்சம் சம்பளம் வாங்குவதாக தற்போது கோலிவுட்டில் அதிர்ச்சி செய்தி ஒன்று பரவியிருக்கிறது. ஆனால் இந்த விசயம் அவரது காதுக்கு சென்றதில் இருந்து கடும் அப்செட்டில் இருக்கிறார்.

அதோடு, இப்போதுதான் நான் வளரத் தொடங்கியிருக்கிறேன் இந்த நேரத்தில் என் வளர்ச்சியை தடுக்க இப்படியெல்லாம் சதி செய்கிறார்களே என்று கொதிக்கிறார். மேலும், இப்படி என்னைப்பற்றி தவறான செய்தி பரப்பி விடுவது சில போட்டி நடிகைகள்தான்.

அவர்கள்தான் எனது வளர்ச்சியை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என்று இந்த மாதிரியான செய்திகளை பரப்பி விடுகிறார்கள் என்று கூறும் ஐஸ்வர்யா தத்தா, சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள் எனது சம்பளம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டு மென்றால் எனக்கு சான்ஸ் கொடுத்திருக்கும் நிறுவனங்களிடம் தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறுகிறார். 


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்
யாஷிகா சொன்ன ஒரு வார்த்தை! கதறி அழுத ஐஸ்வர்யா! இப்படி மாறிவிட்டார்களே?
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நான் என்ன பொம்மையா? ஐஸ்வர்யா-ரித்விகா சண்டை! இரண்டாக பிரிந்த பிக்பாஸ் வீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions