விஷாலுடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா தத்தா

Bookmark and Share

விஷாலுடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா தத்தா

‘ஆம்பள’ படத்திற்குப் பிறகு விஷால், சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த ‘பாண்டியநாடு’ படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தில் இணைகிறார்கள். இப்படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். சூரி காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பாண்டிய நாடு படத்தில் வில்லனாக நடித்த ஹரிஷ் இப்படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார். தற்போது இவர்களுடன் ஐஸ்வர்யா தத்தா இணையவுள்ளார்.

இவர் சமீபத்தில் அட்டகத்தி தினேஷ், நகுல் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தவர். விஷால் படத்தில் ஐஸ்வர்யா தத்தாவிற்கு முக்கிய கதாபாத்திரமாம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் தயாரிக்கிறது. 


Post your comment





Related News
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions