காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா

Bookmark and Share

காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு ஐஸ்வர்யா தத்தா, ஆரி ஜோடியாக காதல் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கிய நிலையில், தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

60-களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது, 80-களில் ஜாதி தடையாக இருந்தது, 2000-த்தில் அந்தஸ்து தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது.

இதை பிரதிபலிக்கும் விதமாக அனைத்து தரப்பினரையும் கவரும் கதைக்களத்துடன் இந்த படத்தை உருவாக்குவதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் தெரிவித்துள்ளார். இவர் இதற்கு முன்பாக அய்யனார் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்து போன காதல், தற்போதைய காதல் என முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி படம் உருவாகிறது.

ஏ.ஜி.மகேஷ் இசையமைக்க, தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்களை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. ஈ.ஆர்.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் பி. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள்.


Post your comment





Related News
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions